128 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
9 சோம்பித் திரியேல் அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. நீதி நூல்களைக் கற்று வருவ தாக எழுதியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. காலத்தை வீணாக்காமல், பொன்போலக் காத்துவரின் எதிர்காலம் ஒளியுள்ளதாக விளங்கும். இளமைப் பருவம் அருமையான பருவம்; எதையுந் துணிந்து, வீறுடன் செய்யும் பருவம். அப்பருவத்தைப் பயன்படுத்தும் முறையில் பயன்படுத்தினால் மேன்மை எய்துவது உறுதி. காலத்தை - பருவத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல், சோம்பிக் கிடந்தால் வாழ்வில் எதையுமே செய்து, மகிழ்வு கொள்ள முடியாது. "சோம்பலே மரணம்" என்று பெரியோர் கூறியுள்ளனர். இதனால், முயற்சிதான் உயிர்வாழ்க்கையாகும் என்ற கருத்தைப் பெறு கிறோம். சோம்பலின்றி முயன்று பணி புரிபவனே மரணத்தை வென்றவனாக, உயிர்வாழ்பவனாகக் கருதப் படுவான். அதனால் கணப்பொழுதுகூடச் சோம்பலுக்கு இடங்கொடாதே. சோம்பல் பலவகைத் தீமைகளைப் பயந்துவிடும். வாழ்வில் அனைத்து நலங்களையும் கெடுத்துவிடும். சோம் பலாக இருப்ப வனுடைய மனம், தீயனவற்றையே எண்ணி யெண்ணி வட்ட மிடும்; தீச் செயல்களைச் செய்யவே அதுநாடும்; நல்லனவற்றை எண்ணவோ செய்யவோ விடாது; பிறர்க்குத் துணைசெய்து வாழவும் இடந்தராது. "வேலை யின்றிச் சோம்பிக் கிடக்குங் கைகளுக்கு ஏதாவது குறும்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும்" - என்றொரு பழமொழி யுண்டு. சோம்பலை விடுத்து, ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டால், மனம் அம்முயற்சியிலேயே சென்று கொண்டிருக்கும்; வேறு தீய எண்ணங்களிற் செல்லாது. அதனால் எப்பொழுதும் ஏதேனும் செய்துகொண்டேயிருக்க வேண்டும்; முயன்று கொண்டேயிருக்க வேண்டும்; மனத்தில் எழுச்சி ஒளி |