விட்டுக் கொண்டே யிருக்க வேண்டும். ஒருவனுடைய உயர்வு, அவனுடைய முயற்சியை-ஊக்கத்தைப் பொறுத்தே அமையும். நமது ஊரிலே உள்ள தாமரைக் குளத்தில் நீர் எந்த அளவில் இருக்கிறதோ அந்த அளவில் தாமரையுங் காணப்படுகிறது. நீர் மிகுந்திருந்தால் உயர்ந்து காணப்படுகிறது; குறைந்திருந்தால் தாழ்ந்து காணப்படுகிறது. அதுபோலவே முயற்சி மிக்கிருந்தால் வாழ்வு உயர்ந்து தோன்றும்; குறைந்திருந்தால் தாழ்ந்து தோன்றும். முயற்சியுடையார் என்றுமே இகழ்ச்சியடையார். 'முயற்சி திருவினையாக்கும்' என்பது முதுமொழி. சிலர் விதி விதியென்று கூறிக்கொண்டு, எவ்வகை முயற்சியும் செய்யாது சோம்பிக் கிடப்பர். இவரால் எதையுமே சாதிக்க முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு முயல்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மை வந்தே தீரும். 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்'. மனத்தளர்ச்சியின்றி, இடைவிடாது ஒருவன் முயலு வானாகில், செல்வம் அவனுடைய வீட்டைத் தேடிக்கொண்டு வரும். உயர்ந்திருந்த நாடுகள் சோம்பலால் தாழ்வுற்றதையும், வீழ்ந்து கிடந்த நாடுகள் முயற்சியால் மேம்பாடுற்று விளங்கு வதையும் உலக வரலாறு நமக்குத் தெளிவாக உணர்த்திக் கொண்டே யிருக்கிறது. முயற்சியால் எத்தகைய அருஞ் செயல்களையுஞ் செய்து முடிக்கலாம். 'முடியாது என்பது சோம்பேறிகளின் சொல்' என, உலகவீரன் நெப்போலியன் உரைத்ததையும் இங்கே நினை வூட்ட விரும்புகிறேன். சோம்பலிற் சுகங் காணும் ஒருவன், தன் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் துயர் காண நேரும்; எதிர்காலம் காரிருளாற் சூழப்பட்டு, இருண்டு காணப்படும். ஒருவனுடைய வாழ்வு, எவ்வளவுதான் உயர்ந் திருப்பினும், ஊரறிய - உலகறியச் சிறந்திருப்பினும், நந்தா விளக்குப்போல் ஒளிவிட்டுக் கொண்டிருப்பினும், சோம்ப லென்னும் இருள் புகுந்து விடுமானால் ஒளி குறையும்; விளக்கும் அணைந்து விடும். குடியைக் கெடுக்கும் ஆற்றல் அச்சோம்பலுக்குண்டு. குடியுயர வேண்டுமென விழைவோன் சோம்பலை அடியோடு நீக்கிவிட வேண்டும்; நீக்க வில்லையானால் அவன் குடிமடிந்தொழிவது திண்ணம். சோம்பல், குடியைக் கெடுப்பதோடு நின்று விடாது; பல குற்றங்களையும் பெருக்கிவிடும். எவ்வளவு செல்வம் பெற்றிருந் |