பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

விட்டது என்பதற்குத்தான். ஆனால் ஒரு வேற்றுமை, தக்கார் பலராகவும் தகார் ஓரிருவராக அருகியும் காணப் பட்டனர் அன்று. இன்றோ தகார் பலராகப் பெருகியும் தக்கார் சிலராக அருகியும் காணக்கிடக்கின்றனர். எப்படியோ தகுதியும் திறமையும் அற்றவர் கல்வியுலகில் புகுந்து விடுகின்றனர். தாங்குரை (சிபாரிசு) ஒன்று தான் அவர் பெற்ற தகுதி.

வேறு அலுவல் கிடைக்கப் பெறாதோர், இங்காவது செல் வோமே என்று ஆசிரியர் உலகில் வேண்டா வெறுப்பாக நுழை கின்றனர். அந்தோ! அவர் என் செய்வர்? வாங்கும் ஊதியத்திற் காக ஏதேனும் உளறவேண்டுமே என்று திருவாய் மலர்ந்தருளு கின்றனர். விருப்பின்றி இப்பணியை ஏற்பதால் வேலையில் பழுதுகள் விளை கின்றன. அதனால் ஆள்வோர் முதல் ஆண்டி வரை ஆசிரியர் களை ஏசுகின்றனர். ஏன்? மாணவர்களே கண்டபடி பேசுகின்றனரே! என் செய்வது? இவற்றையெல்லாம் ஆளும் நல்லவர்களல்லவா உணர வேண்டும். அவர்களுக்கல்லவா இந்த அக்கறை வேண்டும்?

அக்கறை அவர்களுக்கு வரும்வரை மாணவர்தாம் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். எந்த ஆசிரியர் எப்படி நடத்தினாலும் அவற்றைக் கூர்ந்து கேட்க வேண்டும். எவரிடத்தும் ஒன்றிரண்டு நல்லன இருந்தே தீரும். அந்நல்லன வற்றை நாம் ஏற்க வேண்டும். அப் பொழுதுதான் நாம் சிறக்க முடியும். இன்றேல் பயனில்லை. எவரிடத்தும் கீழ்ப்படிந்து படிப்பதுதான் படிப்போர் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கம்.

வள்ளுவர் கல்வி பயில்வோர்க்கு அரியதொரு கருத்தை அறிவுறுத்துகிறார். அதனை இப்பொழுது உனக்குச் சொல்வது நல்லது.

"உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்;
கடையரே கல்லா தவர்".

என்பது அவர் வாய்மொழி.

அதன் பொருளையும் எழுதி விடுகிறேன். சிறிது பொறுமை யுடன் படி. இதையும் "போர்" என்று சொல்லி விடாதே. முன் - முதனில்; இல்லார் போல் - வறியவரைப் போல; ஏக்கற்றும் கற்றார் - தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவர்கள்; உடையார் - பின்பு எல்லாம் உடையவராகக் கருதப்படுவர்; கல்லாதவர் - அவ்வாறு கல்லாதவர்;