பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்15

கடையரே - ஒரு பொருட்டாகக் கருதப்படாமல் கீழாகக் கருதப் படுவர்.

அஃதாவது முதலில் வறியவர்போல ஆசிரியரிடம் தாழ்ந்தும் கீழ்ப்படிந்தும் பாடம் கேட்பவர், பின்னர் எல்லாம் உடைய பெரியோராகக் கருதப்படுவர். கிழ்ப் படியக் கூசுவோர் கடைய ராவர் என்பதாகும். இது பரிமேலழகர் பொருளன்று. நான் சிறிது மாற்றிப் பொருள் கொண்டேன். இதனை உனக்கு வழங்குகிறேன். இதன்படி நடந்து நன்மை பெறு. இரண்டொரு நாளில் குற்றாலஞ் செல்லுவேன். சென்று வந்து விளக்கமாக இன்னும் எழுதுவேன்.

15.8.1956

உன் தந்தை
முடியரசன்.

