பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வளங்கள் மிகுந்து, மனவளங் குறைந்திருந்தால் அது, நல்ல நாடென்ற பாராட்டைப் பெறாது. மன வளந்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத் தைக் காட்ட வல்லது. இவ்வுண்மையை நன்குணர்ந்த நம் முன்னோர்,

"எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று மொழிந்துள்ளனர். அதனால், தான் பிறந்த நாட்டுக்குத் தன்னால் ஒரு சிறு தீங்கும் நேர்ந்து விடாமல் விழிப்பாக இருக்க வேண்டும் எனக் கருத வேண்டும்; உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ தன்னாட்டிற்குத் தன்னாற் பழிச்சொல் உண்டாகிவிடக் கூடாதே என்ற அச்சவுணர்ச்சி நீங்காதிருக்க வேண்டும். இவ்வண்ணம் ஒவ்வொருவரும் கருதி நடக்க வேண்டும். இதுதான் நாட்டுப்பற்று. இதுவே தாயகத்தைக் காக்கும் பண்பாகும்.

நாட்டை யாராண்டாலென்ன என்ற மனப்போக்கில் வாழ்தல் கூடாது. நாமே ஆள்கின்றோம்; நமக்காக ஆள்கின்றோம்; நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் துணை கொண்டு ஆள்கின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும். அவ்வுணர்ச்சியுடன் நாம், அலுவலாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அலுவலாளர், ஆள்வோருடன் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறே ஆள்வோர், அலுவலாள ருடனும், அலுவலாளர் நம்முடனும் ஒத்துழைக்க வேண்டும். இம்மூவரும் ஒருவர்க்கொருவர் அன்புளத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்பதைக் கடமையுணர்வாகக் கொள்ள வேண்டும். அக்கடமை யுணர்வு நாட்டு நலத்திற்காகவே என்ற உறுதி பூணவேண்டும். இவ்வுறுதி, கடமை, ஒத்துழைப்பு என்பன துளியும் இல்லாமல் இருப்போர் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வாழ் கின்றனர் என்ற அளவிற்றான் மதிக்கப்படுவர். நம் வீட்டில் நாய், பூனை, பசு முதலியவற்றை வளர்க்கின்றோமே அவற்றிற்கெல்லாம் நாட்டைப் பற்றிய எண்ணங் கடுகளவேனுந் தோன்றுவ துண்டோ? அவற்றைப் போலவே நாமும் சிந்தனையற்றிருந்து விட்டால், நமக்கு நாடெதற்கு? விடுதலை எதற்கு? குடியரசுதான் எதற்கு? இவை யனைத்தும் வேண்டுமெனில் நாட்டுக்கும் நமக்குமுள்ள தொடர்பை எண்ணிப் பார்க்க வேண்டு மல்லவா? அவ்வாறு நினைந்து பார்க்கும் நாடுகளில் மட்டுந்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இருபிரி வினரும் போட்டியிட்டுக் கொண்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்வதைக் காண முடிகிறது. அத்தொடர்பை எண்ணிப்