பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்143

களையும், ஒளிவிளக்குகளையும் குறிப்பார்த்தெறிந்து விளையாடும் வீர விளையாட்டும் வேண்டப்படுவதன்று. இத்தகைய பொதுச் சொத்துக்களை நாட்டுடைமைகளைப் பாழ்படுத்தும் செயல்களை அறவே விட்டொழிக்கவேண்டும். இவற்றையெல்லாம் ஊறுபடுத்துவ தால் யாருக்கோ நட்ட மென்று எண்ணுதல் தவறு. நமக்குத்தான் இழப்பு; நாட்டுக்குத்தான் இழப்பு. நாட்டுடைமை ஒவ்வொன்றிலும் நம் பங்கும் சேர்ந்திருக்கிறது. அதனால் அவை நமக்கும் உரிமையா கின்றன. நம்முரிமைப் பொருள்களை நாமே பாழ்படுத்தலாமா? இவ்வாறு நினைந்து நல்வழியில் ஒழுகுவது தான் மாணவர்க்குரிய நாட்டுப்பற்றாகும். இவ்வாறே நீ நடந்து வருவாயென்று நம்பு கின்றேன். இது நிற்க.

நீ நோய்வாய்ப்பட்டதாகவும், அப்பொழுது அந்நகர்த் திருக்குறட் கழகத் தலைவர் உனக்குப் பேருதவி புரிந்ததாகவும், மருந்து, பழம் முதலியன வாங்கியுதவியதாகவும், அவற்றிற்குப் பணம் தந்தபொழுது அவர் வாங்கிக் கொள்ள மறுத்து விட்ட தாகவும் எழுதியிருந்தாய். அவர், திருக்குறட் கழகத்துக்குத் தலைவராக இருப்பதற்குத் தகுதியுடையவர் என்பதை மெய்ப்பித்து விட்டார். அவர் அன்புள்ளம் வாழ்க. அப் பெருமகனாரின் இத்தகைய அன்பைப் பெறும் வகையில் நீயும் நடந்து கொண்டிருக்கிறாய் என்பதறிந்து அளப்பிலா மகிழ்ச்சியுற்றேன். அவர் செய்த நன்றியை என்றும் மறத்தல் கூடாது. நீ அவருக்கு நன்றி சொல்லியிருப்பாய். அஃது எனக்கு நன்கு தெரியும். ஒருவர் செய்த உதவிக்கு நன்றி சொல்வதோடு நமது கடமை முடிந்து விடாது; அதனை மறவாது என்றும் மனத்தில் நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமது பண்பாடு. அதனாற்றான் செய்ந்நன்றி சொல்லுதல் என்று கூறாது, செய்ந்நன்றியறிதல் என நம் முன்னோர் தெளிவாகக் கூறியுள்ளனர். அறிதல் என்றால் மறவாது என்றும் நினைந்திருப்ப தாகும். நம் பண்பாட்டிற்கேற்ப நீயும் அவர் செய்த நன்றியை மறவாது, என்றும் நினைவு கூர்தல் வேண்டும்.

அவர் செய்தவுதவி, காலத்தாற் செய்த உதவியாகும். அது சிறியதாயினும் உலகத்தைவிடப் பெரியதாகக் கருதப்பட வேண்டும். எங்களை விட்டுப் பிரிந்து தனித்திருக்கும் உனக்கு, நோய் வந்த காலத்துப் பல்வகையாலும் உதவியிருக்கின்றார்; உதவுவது நம் கடமை என்ற எண்ணத்துடன் செய்துள்ளார். அவர் உதவி கிட்டா