20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
மூன்றாம் வகுப்பில் இடங் காணாக் காரணத்தால் நானும் நான் குற்றாலஞ் செல்ல உதவியாக இருந்த நண்பர் மகாலிங்கமும் இன்னுஞ் சிலரும் இரண்டாம் வகுப்புக் கட்டணம் செலுத்துவதாக வண்டிக் காப்பாளரிடம் (GUARD) சொல்லிவிட்டு இரண்டாம் வகுப்பில் ஏறினோம். அங்காவது இருக்க இடங்கிடைத்ததா? நின்ற திருக்கோலந்தான். ஏனெனில், கிடந்த திருக்கோலம் காட்டும் பெருமாள்கள் எழமன மின்றி அறிதுயில் கொண்டமையேயாகும். எவ்வளவு நேரந்தான் நின்று தொலைப்பது? கால் வலி தாங்க முடியவில்லை. படுத்திருப்பவரை எழுப்பிச் சிறிது இடங் கேட்டேன். அவருக்கு வெகுளி வந்துவிட்டது. ‘என்னய்யா? மனிதன் உறங்குவது தெரியவில்லை?’ என்று கடிந்துரைத்து மீண்டும் சாய்ந்தார். என் நண்பர் மகாலிங்கத்திற்குச் சினம் வந்து விட்டது. ‘அடடே! நீர் மனிதரா? தெரியவில்லையே! மகா மனிதர் ஐயா, மனிதன் நின்று கொண்டே வருவது உமக்குத் தெரியவில்லையே! எழுந்திரும் ஐயா’ என்று அதட்டினார். அந்தப் புண்ணியவான் வாய் பேசாமல் எழுந்து இடங் கொடுத்தார். உலகம் எப்படியிருக்கிறது. பார்த்தாயா? பொறுமையும் வேண்டும். எல்லை மீறினால் பொறுமையைச் சிறிது கைவிடவும் வேண்டும் போலும். காலை ஒன்பது மணியளவில் தென்காசியை அடைந்தோம். அங்கிருந்து மூன்று கல் தொலைவிலுள்ள குற்றாலத்தை நோக்கி, மாட்டு வண்டியில் புறப்பட்டோம். வண்டியின் கூடு மிகத் தணிந்திருந்தமையால் நாங்கள் தலை வணங்கித்தான் இருக்க நேர்ந்தது. எங்கள் மூட்டை முடிச்சு களுக்கிடையில் அமர்ந்திருந் தோம். வண்டி போய்க் கொண்டிருக்கும்போது எங்கள் தலையும் தோளும் வண்டியின் வலிமையைச் சரிபார்த்தன. சில வேளைகளில் எங்கள் தலைகளுக்கிடையேயும் வலிமைப் போட்டி நடந்தது. பாதி வழியைக் கடந்ததும் மெல்லிய குளிர்காற்று வீசத் தொடங்கியது. வழி நெடுகலும் பச்சைப் பசேரென்ற காட்சிகள். சிறிது சிறிதாகத் தலையை மட்டும் வெளியில் நீட்டி அக்காட்சி களைப் பார்த்தோம். வயல் நிரம்ப இருந்த முற்றா இளநாற்றுகள் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கின. மென் காற்று அவற்றின் மீது உராய்ந்து செல்லுங்கால் அவை வளைந்து அசையுங் காட்சி, மெல்லிய பசிய ஆடை காற்றில் துவள்வது போன்றிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் அம் |