பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்21

மென்காற்று, சிறுசிறு நீர்த்துளிகளைத் தூவியது. அது எங்களைப் பனிநீர் தெளித்து வரவேற்பது போல இருந்தது. அவ்வரவேற் பினால், தொடர் வண்டியிற் பட்ட தொல்லையும் வண்டியிலுற்ற வலியும் மறந்து குற்றாலத்தை அடைந்தோம்.

அரசு! கடிதம் நீள்கிறது. அதனால் குற்றாலக் காட்சி பற்றியே அடுத்த கடிதத்திலும் எழுதுவேன். எனக்கும் நேரம் ஆகிறது. என் அலுவலுக்குச் செல்ல வேண்டுமல்லவா? காலம் பொன்னினும் சிறந்தது. கடமையில் தவறுவதும் கூடாதல்லவா? ஆதலின் அடுத்து, மலைக் காட்சியையும் வளத்தையும் பிறவற்றையும் விளக்கி எழுதுவேன்.

22.8.1956

உன் தந்தை
முடியரசன்

