பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

5
கண்குளிரும் குற்றாலம்

அன்புள்ள அரசு,

உன் கடிதம் கிடைத்தது. 'குற்றாலம் சென்று வந்தமை குறித்து எழுதிய தங்கள் கடிதம், குற்றாலம் சென்று வர வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது. எங்கள் கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகக் குற்றாலத் தையே தேர்ந்தெடுத்துள்ளனர். நானும் உடன்சென்று வரக் கருதுகின்றேன். நீங்கள் உடன்பாடு தெரிவிப்பின் நானும் பெயர் கொடுத்து விடுவேன்' என்று எழுதியிருக்கின்றாய்.

மகிழ்ச்சி, நான் குற்றாலத்தின்பம் நுகருங்காலை, ஒருமுறை நம் குடும்பத்துடன் வந்து தங்கி அளவளாவி யான் பெற்ற இன்பத் தைப் பகிர்ந்து நுகர்தல் வேண்டுமென்று முடிவு செய்தேன். அதனால் நீ சென்று வருவதில் எவ்விதத் தடையும் இல்லை. சென்று வரலாம் . நான் எழுதும் அறிவுரைகளை மனத்தில் நிலை நிறுத்திக் கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். நீ நடப்ப தோடன்றி நின் மாணவத் தோழர்களையும் அவ்வாறே நடக்குமாறு சொல்லுதல் வேண்டும். யான் எழுதும் வண்ணம் நடந்து கொண்டால் எவ்வகை ஊறுமின்றி நலமே திரும்பலாம். ஆதலின் முன்னறிவிப் புடன் நடந்து கொள்க. மேலும் அம்மலை பற்றிச் சிறிது விளக்கம் தருகிறேன். அவ்விளக்கம் வழிகாட்டி போல உதவும்.

குற்றால மலை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி யாகும். இப்பகுதியைத் திரிகூட மலை, பொதிய மலை என்றெல்லாம் வேறு பெயராலும் அழைப்பர். இரண்டு மூன்று மலைத் தொடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து கிடக்கும். ஓங்கி உயர்ந்த மலைத் தொடர்கள், முகில் மூடிய மலையுச்சி, அருவியின் ஆரவாரம், சோலைகளிற் புகுந்து சலசலப்பை உண்டாக்கிவரும் பூங்காற்றின் இறைச்சல், புள்ளினங்கள் எழுப்பும் பல்வகை ஒலி, அருவியில்