பக்கம் எண் :

32கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

அருகில் இருந்த குன்றில் ஆண்களும் பெண்களும் பலராய்க் குழுமியிருந்தனர். அங்கே மாணவர்கள் கூடிநின்று கீழ்த்தரமான பாடல்களைப் பாடிக் கும்மியடிப்பது போல வட்டமிட்டு நின்று கொட்டமடித்தனர். பெண்களும் அமர்ந்துள்ளனரே, இத்தகு பாடல்களைப் பாடலாமா என்று எண்ணாராய் நாணமின்றிக் கூத்தாடினர்.

நீயும் கல்லூரியில் பயில்வதால் உனக்கு வருத்தமாக இருக் கலாம் இவ்வாறு எழுதுவதால். ஆனால் அவர்கள் அவ்வாறு கண்ணியக் குறைவாக நடப்பதால் யாருக்குக் கேவலம்? அவர்கள் பயிலும் கல்லூரிக்கே கெட்ட பெயர் தானே? பண்பாடில்லாத இவர்கள் படித்து, வெற்றி பெற்று, நாட்டுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள்? இவர்களால் நாட்டுக்கு நல்லபெயர் கிட்டுமா? என்றுதானே பார்ப்பவர் கருதுவர். கருதுவதென்ன - சொல்லவே செய்தார்கள். என் காதாரக் கேட்டேன். மாணவப் பருவம் பலவகையான கேளிக்கைகளுக்குரிய பருவந்தான். எனினும் அதற்கும் ஓரளவு வேண்டுமல்லவா? அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சுதானே! மாணாக்கர் என்ற சொல்லுக்கே மாண்பை ஆக்குபவர்கள் என்று பொருள். அதனால் மாண்பை ஆக்க வேண்டுமே தவிர மாண்பைப் போக்கிவிடக் கூடாது.

அதனால் நீங்கள் செல்லும் பொழுது பெருந்தன்மை யுடன் நடந்து, உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் நற்பெயர் உண்டாக்குங்கள். சில கல்லூரி மாணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையாகவும் தொண்டு மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்கள் தெரியுமா? அத்தகையோரைக் காணும் பொழுதெல்லாம் என் அகங் குளிரும், முகம் மலரும், அவ்வாறு நீங்களும் நடந்து கொள்ளுங்கள்.

தம்பி, குற்றாலத்துக்கு அருகில் 'பம்புளி' என்ற பெயர் தாங்கிய ஓர் ஊருண்டு. அதைப் பற்றி மட்டும் எழுதிக் கடிதத்தை முடிக் கின்றேன். சொற்களை வழுவின்றி எழுத வேண்டும் - சொல்ல வேண்டுமென்று அடிக்கடி உன்னிடம் நான் கூறியிருக்கின்றேன். வழுவுடன் பேசுவதால் எழுதுவதால் எவ்வளவு பெரிய கேடுகள் விளைந்துவிடும் என்று கூறியிருக்கிறேன்.

நான் 'பம்புளி' என்ற இதன் பெயரைக் கேட்டவுடன் இது நம் பகுதியன்று போலும் எனக் கருதிவிட்டேன். பெயர் எனக்குப் பெருவிந்தையாகவும் இருந்தது. பதற்றம் என்ற சொல்லைப் 'பதஷ்டம்' என்றும் வேட்டி என்னும் சொல்லை 'வேஷ்டி' என்றும்