பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

8
பொறுத்தது போதும்!

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். யாரோ ஒருவர் தமிழைப் பற்றி இழிவாக ஓரிதழில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு வருந்தி எழுதியிருந்தாய். வருந்தி யாது பலன்? பெரும்பான்மையான இதழ்கள் அவ்வாறுதானே எழுதுகின்றன. எழுத்தாளர்களும் மொழி யைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கிப் படித்து மகிழ்கின்ற நிலையையும் காண்கின்றோமே! என் செய்வது? அந்த அளவிற்குத் தமிழ்மாந்தர் உணர்வற்றுக் கிடக் கின்றனரே!

தமிழ்நாட்டில் தமிழ்மக்களே தமிழ்த் தாளிகைகளில் தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் தமிழால் எழுதுகின்றனர். அவற்றுட் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுகின்றேன். உன் நண்பர்களிடம் அவற்றை எடுத்துக் கூறி, அவர்களுக்கும் உணர்ச்சி யூட்டு. தமிழகம் விழிக்குமா என்று பார்ப்போம்.

நாளிதழ், கிழமையிதழ், திங்களிதழ் என்று எத்தனையோ இதழ்கள் தமிழ்மொழியில் நடைபெற்று வருகின்றன. தமிழர்களால் வெளியிடப்படுபவை அவை. தமிழ்மக்கள் அவற்றிற்கெல்லாம் ஆர்வத்துடன் வரவேற்பும் நல்குகின்றனர். தமிழர்க்காகத் தமிழ் மொழியிலே வெளிவரும் அவ்விதழ்கள் தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம் இவற்றிற்கு ஆக்கந் தேடும் முறையிற்றானே வெளிவர வேண்டும். அவ்வாறு வெளியிடுவது தானே முறைமையும் பண்பும் ஆகும். ஆனால் அனைத்திதழ் களும் அவ்வாறு உயரிய நோக்குடன் வெளிப்படுகின்றனவா என்றால் அதுதான் இல்லை.

சிற்சில இதழ்கள் தவிரப் பெரும்பாலான இதழ்கள் மொழி, இனம் இவற்றைப் பழித்தும் இழித்தும் கூறி உலாப்போதலைக்