காண்கிறோம். நடுநிற்பார்தம் நெஞ்சம் வருந்தும் வகையிலே எழுத்தோவியங்களைத் தாங்கி வருகின்ற அவல நிலையையும் காண்கின்றோம். பொருள் வருவாய் ஒன்றே குறிக்கோள் அவ்விதழ் களுக்கு. பெயர் விளம்பரம் ஒன்றே குறிக்கோள் எழுதுவோர்க்கு. விளைவைப் பற்றி எள்ளளவும் கவலைப்படுவதில்லை. இனத்தையும் மொழியையும் இழித்தும் பழித்தும் எழுதினால், பெருவாரியாக விற்பனையாகும் இதழ்களிலே இடங்கிடைத்து விடுகிறது தந்நலம் விழையும் எழுத்தாளர்க்கு. எங்குங் காணமுடியாத புதுமை இங்கு நிகழ்ந்து வருகிறது தம்பி. குதிரை அவதாரமெடுத்து, வெளிவரும் புகழ்பெற்ற வார இதழ் ஒன்று தீபாவளி மலர் வெளியிட்டிருந்தது. அம் மலரில் வெளிவந்த கட்டுரையொன்றில் "பாண்டியன் இமயமலையில் மீன் பொறித்தான்" என்று ஒரு பகுதி வருகிறது. இச் சொற்றொடர்ப் பொருளைச் சிற்றறிவினரும் புரிந்து கொள்வர். எனினும் இத் தொடருக்கு அடிக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. "மீன் பொறித்தான் என்பது மீன் பொரியலைக் குறிக்கவில்லை" என்னும் முறையில் ஏனைப் பொருளில் இருந்தது அக்குறிப்பு. இமயத்தில் பாண்டியன் மீன் பொறித்தான் என்றால் தமிழ் மகனுக்கு வீரச் சுவையல்லவா தோன்ற வேண்டும்? வீரம் இன்று குறைவுபட்டிருந்தாலும் நம் முன்னோர் வீரராக வாழ்ந்தனரே என்று பெருமிதமல்லவா கொள்ள வேண்டும்? வீரச் சுவைக்கு மாறாகக் கட்டுரையாளர்க்கு உணவுச் சுவை தோன்றிவிட்டது. புலவுக் கடையிலே ஒரு முறை ஏறி இறங்குகிறார். மீன் வறுவல் நினைவிற்கு வந்து விடுகிறது. அந்நினைவு மிகுதியால் மீன் பொரியலை அடிக் குறிப்பாகக் கொடுத்து விடுகிறார். கட்டுரையாளர் நன்கு கற்றறிந்தவர்; நீதிபதியாக இருப்பவர்; 'இலக்கியப் பரம்பரைக்கே நாங்கள் தாம் வாரிசு' என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்தவருங் கூட. இப்படிப் பட்ட பெருமகனார் இவ்வாறு எழுதுகிறார் ஏளனமாக. பத்திரிகை உலகில் கதிர்வீசி வெளிவந்து கொண்டிருக் கிறது மற்றோர் இதழ். அவ்விதழில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை (நகைக் சுவைக்காக) வெளிவந்தது. ஆராய்ச்சியென்றால் சாதாரண ஆராய்ச்சி யென்று எண்ணி விடாதே. அறிவைப் பழுக்கக் காய்ச்சித் தட்டி, உருட்டிக் கூராக்கி, அதைக் கொண்டு எழுதப்பட்டது. தமிழகம், |