பக்கம் எண் :

36கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வான்புகழ் கொள்ள உலகுக்கு ஈந்தது யாரை? வாழ்வு நூல் தந்தவர் யார்? தமிழருக்கும் ஓர் உயரிய மறையுண்டு என்று தலை நிமிர்ந்து பேசும்படியான நூலைத் தந்தவர் யார்? அப் பெரியார் திருவள்ளுவர் என்பதை யாவரும் அறிவர்.

இப் பெருமகனாரின் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பலவகையாகக் கூறுவர். ஆனால் இந்த ஆராய்ச்சியாளர் கூறுங் காரணம் தனியானது. ஆராய்ச்சியறிவின் ஆழத்தைப் புலப்படுத்துவது. அக்காரணத்தை நீயும் தெரிந்து கொண்டால், இவ்வரிய ஆராய்ச் சிக்குக் கைம்மாறாக எதை வேண்டு மானாலும் கொடுக்கலாம் என்ற எண்ணமே தோன்றும். ஆராய்ச்சியைப் பார்.

'வள்ளுவர், அடிக்கடி வள்வள் என்று கத்திக் கொண்டிருந்த தால் இவருக்கு இப்பெயர் வந்தது' என்னுங் கருத்துப்பட எழுதி யிருக்கிறார் ஆராய்ச்சியாளர். உள்ளங் கொதிக்கிறதா உனக்கு? உன் இனத்தவன்தானே இன்னும் பணங்கொடுத்து வாங்கி வளர்த்துக் கொண்டிருக்கிறான் இத்தகைய புல்லிதழ்களை, அவனுக்கு மனங் கொதிக்க வில்லையே!

வேடிக்கையாக எழுத விரும்பினால் தந்தையையும் பாட்டனை யுமா ஏளனப் பொருளாக வைத்துக் கொண்டு எழுதுவது? முறை வேண்டாவா? எழுதுவோர் எண்ணிப் பார்க்க வேண்டாவா? வாங்குவோர்தாம் சிந்திக்க வேண்டாவா? பொறுமை பொறுமை என்று பேசி வருந் தமிழகம் இன்னும் எத்துனை நாள் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறதோ?

மற்றொரு கொடுமையைப் பார். தமிழ் தனித்தியங்குந் தன்மையது. பிறமொழிச் சொற்களைக் கலந்தெழுதினால் தமிழ் கெட்டுவிடும் என்றெல்லாம் அறிவுடைய பெருமக்கள் கருது கின்றனர். இத்துறையில் ஓரளவு விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கவிஞர் என உலாவரும் ஒருவர், நூலொன்று வெளியிட்டார். அந்நூலுக்குப் பெயர் 'புஷ்பமாலிகா' என வட மொழியில் வைக்கப்பட்டுள்ளது. அந்நூலுக்கு முன்னுரை எழுதிய பெருமகனார், பெயர் சூட்டிய பெருமையைப் பெரிதும் பாராட்டி எழுதியுள்ளார்.

அப்பாராட்டு நமக்கு வருத்தத்தைக் கொடுக்க வில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்ட அவருக்கு உரிமை