பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

இருப்பினும் தங்கள் விருப்பத்தை அவர்பால் விண்ணப்பிக்கின்றேன்." என மறுமொழி தந்தார் அமைச்சர்.

'சரி; எப்படியும் வெற்றியுடன் மீள்க. நமக்கு வேண்டியது இளமை ஒன்றே. சென்று வருக' என்றான் மன்னன்.

*******

'காஞ்சிக் காவலரே! வணக்கம்'. வருத்தம் தோய்ந்த முகத்துடன் வந்து நின்றார் அமைச்சர்.

'வருக! வருக! அமைச்சர் வெற்றியுடன் மீண்டமைக்கு எம் மகிழ்ச்சி நும் முயற்சிக்கு எம் பாராட்டு' அரசன் மகிழ்ச்சி பொங்க வரவேற்றான்.

'அரசே! மிகவும் வருந்துகிறேன். ஆழ்வார் பாட மறுத்து விட்டார்'. என அமைச்சர் மறுமொழி பகர்ந்தார்.

'ஏன் மறுத்து விட்டார்?' வெகுளியுடன் மன்னன் வாயிலிருந்து வெளிவந்தது இவ்வினா.

'ஆண்டவனுக்குத்தான் அவருடைய பாமாலை உரியதாம். மனிதரைப் புகழ்ந்து பாட அவர் தம் நா இசையாதாம்! - அமைச்சர்.

'ஓ! ஆண்டவனுக்குத்தான் இசையுமோ அந்த நா? மகளிருக் கென்றால் மட்டும் சிறிது மாறிவிடும் போலும்!" - அரசன்

'வேந்தே! நும் பேச்சு நெறி தடுமாறுகிறது!' என்று அமைச்சருக் கருகிலிருந்து மற்றொரு குரல் வந்தது.

'யாரது? தடுமாறுவது என் பேச்சா? ஆழ்வாரின் போக்கா? மகளிரைப் பாடுகிறார்; மன்னனைப் பாட மறுக்கிறார்' பெருமிதத் துடன் பேசினான் அரசன்.

'அஃது அவர் விருப்பம்; அவர் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை' என்று மறுமொழி தந்தது அந்தக் குரல்.

'விருப்பம்! உரிமை! ஓ! ஓ! குமரியின் மீது விருப்பம்! நாடாளும் கொற்றவன் மீது வெறுப்போ? கிழவியைக் குமரியாக்கிக் கொண்டது உரிமை! நாட்டு மன்னனின் வேட்கையைப் புறக் கணிப்பதும் உரிமை?' அரசன் சினந்து பேசினான்.

'அரசே! தங்களைப் போன்றார் இவ்வாறு பேசுவது முறை யன்று. பெரியாரைப் பிழையேல் என்பது முதுமொழி! ஆண்டவன்