பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

'அரசர் பெரும! இரண்டாவது ஆணையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்' என்று சொல்லிவிட்டு கணிகண்ணன் விரைந்து நடந்தான்.

கணிகண்ணன் நிகழ்ந்ததையெல்லாம் ஆழ்வாரிடம் உரைத்து விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

உண்மையுள்ள அந்த மாணவனைப் பிரிந்திருக்க ஆழ்வாருக்கு முடியவில்லை. மனம் குழம்பிக் கொண்டே காஞ்சிப் பெருமாளிடம் சென்று,

கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
            மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய
            செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
            பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

என்று பாடி முடிக்குமுன் திருமால் எழுந்தார்; பாம்புப் படுக்கையைச் சுருட்டித் தோளில் போட்டுக் கொண்டார். நடை யைக் கட்டினார். அவர் வாழ்க்கைத் துணைவி இலக்குமி குறுக்கிட்டு, 'என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் படுக்கையும் கையுமாகப் புறப்பட்டு விட்டீர்களே! எவ்வளவு தூரமோ? அந்தப் பழக்கம் இன்னும் உங்களை விட்டுப் போக வில்லையோ?' என்று கேலி யாகப் பேசிச் சிரித்தார்.

"திருமகளே! நகைமொழி பேசும் நேரம் இதுவன்று. என் அன்பன் திருமழிசைக்காகச் செல்கின்றேன். அவன் மனம் நொந்து தொண்டை மண்டலத்தை விட்டு வெளியேறுகிறான். அவன் பின்னே நானும் செல்லத் துணிந்துவிட்டேன். நீ வேறொன்றும் தவறாகக் கருதாதே'!

'உயிர்த் துணைவரே! யாரோ ஒருவன் போகின்றான் என்பதற் காக உங்கள் குடும்பத்தை - குடியிருந்த ஊரை விட்டு வெளியேறு வதா? ஏன் இப்படியெல்லாம் பித்துப் பிடித்தாற் போல நடந்து கொள்கிறீர்கள்?' என்று மனம் வருந்திக் கேட்டார் இலக்குமி.

'மலர்மங்கை! யாரோ ஒருவன் என்று அவ்வளவு எளிமை யாகச் சொல்லிவிடாதே. அவன் என் உயிரனையான். உண்மைத் தொண்டன். தொண்டனுக்கு நான் தொண்டன் என்பதை நீ உணராயா? மேலும் அவன் வாயிலிருந்து வெளிவரும் தமிழ் மொழிக்காக - தமிழ்ப் பாடலுக்காக அவன் பின்னே ஓடுகிறேன். பித்துப் பிடித்தாற்போல நடந்து கொள்கிறேன் என்று என்னைப்