தலைவன், ஒரே கட்சி என்ற பாசிச மனப்போக்கு இவர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டது என்று தெரிகிறது. இல்லா விட்டால், இந்நாட்டின் சூழ்நிலை களையும், பழக்க வழக்கங் களையும், இன, மொழி வேறுபாடு களையும் கருத்தில் கொண்டு, தேசிய ஒற்றுமைக்கு வழிகாண வேண்டிய திருக்க, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அசட்டுப் பிடிவாதம் பிடித்து நிற்க மாட்டார்கள். இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்ததும் இந்தி ஏகாதிபத்திய வாதிகள் வெறி கொண்டு ஆடத் தலைப் பட்டிருக்கின்றனர் என்பது தெளிவாம். முதலில் இந்துஸ்தான் மொழியென்று பேசி வந்தவர்கள் பிறகு இந்தியென்று பேசத் தலைப்பட்டனர். இப்பொழுது இவர் களில் முக்கியமானவர்கள் வடமொழியைத் தான் ஆட்சிமொழி யாக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். இவர்களது கைப் பொம்மை களாய் மத்திய ஆட்சியாளரும் மாகாண ஆட்சியினரும் இருந்து வருவது இவர்களது வெறியை மேலும் மேலும் தீவிரப் படுத்தி வருகிறது." "இந்திதான் தேசியமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டதும் தவிர, அதனை அமலாக்குவதில் இவர்கள் ஹிட்லரை விட வேகமாகச் செல்வதைப் பார்த்தால், இவ்வுப கண்டத்திலுள்ள மற்ற தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலானவற்றை அழித்துவிட எண்ணி விட்டனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது" இவ்வாறு பிரசண்ட விகடனே பேசுகிறதென்றால் இதனைக் குறுகிய மனப்பான்மை என்று கூறினால், கூறுவோர்தம் அறிவை நாம் ஐயுறுவது தவிர வேறென் செய்வது? மொழித்துறையில் விரிந்த மனப்பான்மை பேசுவது தவறான வழியென்று தெரிகிறது. பேச்சு வழக்கற்ற வடமொழி பொது மொழியாக வேண்டுமென்று சொல்லும் ஆணவத்தைப் பார்த்த பின்னரும், பலப்பல படையெடுப்பாலும் அழிக்கப் படாத சமயத்தின் பேரால் நீரிலும் நெருப்பிலும் இட்டும் சாவாத - உயர் தனிச் செம்மொழியென்று வேற்று நாட்டினராற் புகழப்பட்ட தமிழ் மொழியைப் பொது மொழியாக்க வேண்டு மென்று நாம் கூறா விட்டாலும், தமிழகத்திலேனும் உலவ விடுங்கள் என வேண்டினால் இது குறுகிய மனப்பான்மையா? நெஞ்சம் என்று ஒன்று அவர் களுக்கு இருக்குமானால், சிந்திக்கும் ஆற்றல் சிறிதேனும் இருப்பது |