| 64 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
ஆங்கிலம், வடமொழி, இந்தி முதலிய எத்தனை மொழிகளின் படையெடுப்பு இங்கு? நம் செல்வம், உழைப்பு, நேரம் அத்தனையும் பிற மொழிகளுக்கே செலவிட்டால் நம் தாய்மொழியை வளர்ப்பவர் யார்? தாய்ப்பால் நிறைய இருக்கும் பொழுது அதை விடுத்துக் குழந்தைக்குப் புட்டிப்பாலை ஏன் புகட்ட வேண்டும்? நாகரீகமற்ற இனத்தவர் என்று சொல்லப்படும் நாகர்களிடம் காணப்படும் மொழிப்பற்றில் ஓரளவாவது நம்மிடம் இருக்கவேண்டாவா? உன் தந்தை முடியரசன் |