68 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
யாத, தமிழுணர்வே இல்லாத இந்த நிலையிற் பிறமொழிக் கற்பது கூடாதென்று சொல்கிறேன். அவ்வளவுதான். சாதுவன் இருக்கட்டும். அவனைப் பற்றிக் காப்பியந் தானே கூறுகிறது. குமரகுருபரர் என்ற துறவியைப் பற்றிக் கூறுகிறேன் கேள். 'நீதி நெறி விளக்கம்' முதலான பல நூல்களை ஆக்கியவர் குமர குருபரர். அவர் ஒருகால் வடநாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் ஒரு செயலை முடித்துக் கொள்வதற்காக அரசன் உதவியை நாடவேண்டிய நிலை இருந்தது. அரசனுக்குத் தமிழ் தெரியாது; குமரகுருபரருக்கோ 'இந்துஸ்தானி' தெரியாது. அரசனோடு அவன் மொழியிலேயே உரையாடினால், தம் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என எண்ணிய அடிகள், விரைவில் அம்மொழியைக் கற்றுக் கொண்டு அரசனோடு, உரையாடி வெற்றி கண்டார் என அறிகிறோம். இதை நாம் வெறுக்கவில்லையே! பாராட்ட வன்றோ செய்கிறோம். தமிழன் எதையும் விரைவிற் கற்றுவிடு வான் என்று. ஆனால் தமிழை மறந்து செல்லும் போதுதான் தவிக்கிறது நெஞ்சம்! குமரகுருபரர் தமிழை மறந்து பிற மொழியைப் பயில வில்லையே. நூல்கள் இயற்றும் அளவு தமிழ் கற்றார். அதன்பின், தமது தேவைக்காக அவன் மொழியைக் கற்றார். நம் செட்டி நாட்டு மக்கள்பலர், மலேயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு வணிகத்தின் பொருட்டுச் செல்வர். அங்கங்கே பேசப்படும் மொழியைத் தெரிந்து கொள்வர். அவர்களுக்கு அவர்கள் தொழி லுக்குத் தேவைப்பட்டது. கற்றுக் கொண்டனர். யாரும் திணிக்க வில்லையே செட்டி நாட்டார் அனைவரும் அம்மொழிகளைக் கற்கவில்லையே. தமிழுணர்ந்த பின்னரே பிறமொழிகள் பயிலலாம். அதுவும் நாம் விரும்பும் மொழிகளேயன்றிப் பிறர் ஆணைக்கோ, அச்சுறுத்தலுக்கோ கட்டுப்பட்டுப் பிறமொழிகளை ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரையார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவர் களெல்லாம் பன்மொழிப் புலவர்கள். ஆனால் அவர்கள் தமிழை வெறுத்து விடவில்லையே! தமிழ் வளர்ச்சிதானே அவர்தம் குறிக் கோளாக இருந்தது. பிறமொழிப் பயிற்சியும் தமிழுக்கு ஆக்கந்தரு மேல் வேண்டற் பாலது; வரவேற்கத்தக்கது. தமிழுக்கு ஊறு நேருமேல் அப்பயிற்சி அறவே கூடாது. உன் தந்தை முடியரசன். |