விட்டார். யாப்பிலக் கணத்தைக் காப்பாற்றப் புணர்ச்சியிலக் கணத்தைப் புறங் கண்டார். கம்பன் பலவிடங்களில் இலக்கணத்தைத் தன் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறான். இராவணனை விடுத்து, இராமனோடு சேர்ந்து கொண்ட வீடணன், கும்பகருணனையும் இராமனுடன் சேர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறான். அதற்கு உடன்படாது மறுத்துரைக்கும் கும்பகருணன், "கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீரா தாயின் பொருத்துறு பொருளுண் டாமோ பொருதொழிற் குரியராகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்குரிய தம்மா" (கும்பகருணன் வதைப்படலம் 157) என மறுமொழி விடுக்கின்றான், அஃதாவது "இறை வனாகிய அரசன் (இராவணன்) தீது நினைத்தால் அதனைத் தடுத்துத்திருத்த வேண்டும். இயலாவிடின் போர்க்கோலம் பூண்டு அவனுக்காகப் போர்புரிந்து ஒருத்தனாகிய அண்ணன் இராவணனுக்கு முன்னர்ப் போர்க்களத்தில் மடியவேண்டும். அவனிட்ட சோற்றையுண்டு வளர்ந்த நமக்கு இதுதான் கடமை யாகும்" என்பது கருத்து. இங்கே ஒருத்தன் என்ற சொல்லைக் கம்பன் பயன்படுத்தியுள்ளான். எண்ணுப் பெயரில் வரும் பொழுது, ஆண்பால் ஒருமை ஒருவன் என்றும், பெண்பால் ஒருமை ஒருத்தி என்றும் வருதல் வேண்டும். இஃது இலக்கண விதி. ஒருத்தன் என்றோ ஒருவள் என்றோ வருவது வழு. ஆனால் கம்பன் எதுகை நயத்துக்காக ஒருத்தன் என்றே பயன் படுத்துகிறான். ஒரு காரணம் பற்றி இலக்கண விதியை மீறிச் செல்கிறான். சான்றோர்கள், கவிஞர்கள் இவ்வாறு இலக்கணத் தைத் தம் வழிக்குக் கொண்டுவருவதுண்டு. இத்தகைய உரிமைகள் கவிஞர்களுக்குண்டு. உரிமை யுண்டு என்பதற்காக எல்லாவிடங்களிலும் இலக்கணத்தைத் தூக்கி எறிந்து விடுதல் கூடாது. வழு, வழாநிலை, வழுவமைதி என மூன்று நிலையுண்டு. அஃதாவது குற்றமுடையது, குற்றமில்லாதது, குற்ற மாயினும் சான்றோர் வழக்கில் வருவதால் அமைத்துக் கொள்வது. இம்மூன்றாம் நிலைக்குத்தான் வழுவமைதியென்பர். இவ்வாறு கூறுவதால் வழுவமைதி களையே அமைத்துப் பாடல் எழுதி |