பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

17
எது சரி

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். நல்ல நடையில் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தைக் கண்டு மகிழ்வுற்றேன். "தந்தையே, தங்கள் மைந்தன் மாத்தமிழுக்குத் தீங்கு செய்யேன்; நீங்கள் கூறுமாப்போலே, நூற்கள் பல பயின்று பாடல்கள் எழுத முனைவேன்; இத்துடன் பா ஒன்று விடுத்துளேன்; அருள்கூர்ந்து அதனைச் செப்பஞ் செய்து உதவுங்கள்; சில நாட்களில் எந்தன் திறமையை வளர்த்துச் சிறந்த பாவலனாக, உங்கள் மனதை மகிழ்விப்பேன்" எனக் குறித்திருந்தாய். ஆர்வம் பாராட்டுக் குரியது. ஆர்வத்துக்கேற்றவாறு பிழைநீக்கி எழுத முயலுதல் வேண்டும்.

மாதமிழா? மாத்தமிழா?

உன் மடலில் மாத்தமிழ் என எழுதியிருந்தாய். மா தமிழ் என்றுதான் எழுதவேண்டும். விளக்கம் தருகிறேன். மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள். மா என்னும் ஓரெழுத்துத்தொரு மொழிக்குப் பல பொருள்கள் உண்டு. பெருமை, கருமை, விலங்கு, மாமரம், மாமைநிறம், அரிசி முதலியவற்றின் மாவு எனப் பல பொருள்கள் உண்டு. மா கடல் என்றால் பெருங்கடல் என்று பொருள். மாக்கடல் என்றால் கருங்கடல் என்று பொருள். இங்கே மா தமிழ் என்றவிடத்து மா என்பது தமிழின் பெருமை குறிக்க வந்தது. செந்தமிழ் என்றும் பைந்தமிழ் என்றும் கூறுவரேயன்றிக் கருந்தமிழ் என்று கூறுவாரிலரே.

இதற்குப் பாரதத்திலிருந்து எடுத்துக்காட்டு ஒன்று தருகிறேன். தூது வந்த கண்ணன், துரியன் அரண்மனைக்குச் செல்லாமல், விதுரன் இல்லத்திற்குச் செல்கிறான். அவனைக் கண்ட விதுரன் பெருமகிழ்வு கொண்டு " என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்" என்று கூறுகிறான். இங்கே மா தவம் என்று கூறுகின்றானே தவிர