பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

இத்துடன் என்பது சரியா?

இத்துடன் என எழுதுவது தவறு. இஃதுடன் என எழுத வேண்டும் அல்லது இதனுடன் என்று அன்சாரியை சேர்த்து எழுதலாம். இது + உடன் சேரும்பொழுது, இது என்பது இடையில் ஆய்தம் பெற்று 'இஃது' எனவரும். அது, இது, உது என்னும் சுட்டு மொழிகள், வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் அவை ஆய்தம் பெறும் என்பது விதி. அவ்விதிப்படி, "இஃதுடன்" என வந்தது. அச்சொல்லை நாளடைவில் இத்துடன் எனத் தவறாக ஒலித்துப் பழகிவிட்டோம்.

இன்றுங்கூடச் சிலர் அஃது, இஃது என்னுஞ் சொற்களை, அக்து, இக்து என அழுத்தமாகச் சொல்வதைக் கேட்கிறோம். இவ்வாறுதான் பல சொற்களைப் பிழைபட ஒலித்துத் தடுமாறு கிறோம்.

மனமா? மனதா?

மனம் என்ற மகரவீற்றுச் சொல்லை மனது என்று பிழையாக எழுதி வருகிறோம். மனம் என்பது நல்ல தமிழ்ச் சொல். நாம் மனது என்று எழுதுவதால் சிலர், அச்சொல் வடமொழியிலிருந்து வந்தது என்றும் மனசு என்பது மனது ஆயிற்று என்றும் துணிந்து கூறு கின்றனர். மனம் என்னும் மகரவீற்றுச் சொல் வேற்றுமை உருபு களுடன் சேரும் பொழுது மனத்தை, மனத்தால், மனத்துக்கு என அத்துச்சாரியை பெற்றுவரும். இதை நன்கு நினைவில் நிறுத்து. இனி மனதை என்று எழுதாதே மனத்தை என்றெழுது.

என்றனா? எந்தனா?

அடுத்து எந்தன் என்று எழுதியிருந்தனை அதுவும் தவறு என்றன் என்றுதான் எழுதவேண்டும். இச்சொல் என் + தன் எனப் பிரிக்கப்படும். தன் என்பது சாரியை. இஃது ஒருமைக்குரியது. பன்மையாயின் எந்தம் என்றுவரும். அது, எம் + தம் எனப் பிரிக்கப்படும். பன்மைக்குத் 'தம்' என்னும் சாரியை கொடுத்து எழுத வேண்டும். நீயோ ஒருமையையும் பன்மையையும் சேர்த்துக் குழப்புகிறாய். நீயும் குழம்பாதே; பிறரையும் குழப்பாதே.

திருநிறை செல்வனா? திருநிறைச்செல்வனா?

நம் இல்லத்திற்கு வரும் திருமண அழைப்பிதழ்களைப் பார்த்திருக்கிறாய். அவற்றில் எண்பது விழுக்காடு திருநிறைச்