செல்வன், திருநிறைச் செல்வி என்றுதான் காணல் கூடும். அவ்வா றெழுதுவது பிழையாகும். திருநிறை செல்வன் என்று ஒற்று மிகாமல் எழுதுதல் வேண்டும். அச்சடிக்கக் கொடுப் போர், சரியாக எழுதியிருப்பினும் அச்சகத்தார், திருத்தி நிறைச்செல்வன் என்றே அச்சடித்துக் கொடுப்பர். நிறைச்செல்வன் என்றால் எடைமிகுந்தவன் என்று பொருள். அஃதாவது பருமனானவன் என்று பொருள். மணமகனோ, மணமகளோ பருமனாக இருந்தால் அழகாகவா இருப்பர். திருநிறை செல்வன் என்றிருந்தால், அழகு மிகுந்தவன், செல்வமிகுந்தவன் என்று பொருள். நிறைசெல்வன் என்பது வினைத் தொகை என்று இலக்கணம் கூறும்; வினைத்தொகையில் ஒற்று மிகுதல் கூடாது. உன் நண்பர்களுக்கு இதனை எடுத்துச் சொல்லி, அவர்கள் இல்லத்து அழைப்பிதழ்களைச் செவ்வனே அச்சிட வேண்டிக்கொள். பெறுநரா? பெறுனரா? என் முகவரி எழுதுமிடத்தில் 'பெறுனர்' என்று குறிப்பிட்டி ருந்தாய். இனிமேல் பெறுனர் என்று குறிப்பிடாமல் 'பெறுநர்' என்று குறிப்பிடு. பெறுநர் என்பது பெயர்ச்சொல். பெறு+ந்+அர். இதில் நகர ஒற்றுக்குப் பெயரிடைநிலை யென்று பெயர். ஓட்டுநர், நடத்துநர், இயக்குநர் என்பனவும் அவ்வாறே பெயரிடை நிலை பெற்றே வரும். நன்கு படித்தவர்களுங் கூடப் பெறுனர் என்று எழுதி விடுகின்றனர். பிறரைத் திருத்தி வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறினால் என் செய்வது? அரசு அலுவலகங்களிலிருந்து வரும் மடல்களிற் கூடப் பெறுனர் என்று குறிப்பிடப் பெறுவதைக் கண்டு மனம் நோவதுண்டு. தமிழ் தமிழ் என்று கூச்சலிடுவது பெரிதன்று. அதன் வளர்ச்சியில் மனம் செலுத்த வேண்டும். அதுதான் பயன் தரும். ஆணையரா? ஆனையரா? ஒரு நகராட்சியில் ஓர் அறிவிப்பு எழுதி வைத்திருந்தனர். நானும் என் நண்பரும் படித்தோம். அந்த அறிவிப்பின் கீழ் 'ஆனையர்' என்று எழுதப்பட்டிருந்தது. நான் வருந்தினேன். என் நண்பர் சொன்னார் 'அது சரிதானே, நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்? என்று. என்ன நண்பரே 'ஆணையர்' என்றுதானே இருத்தல் வேண்டும். 'ஆனையர்' என்றல்லவா தவறாக இருக்கிறது என்று வருந்திக் கூறிn. 'ஆணையர் யானை போலப் பேருருவம் |