முள்ளவை. அரசியல் பொருளியல் முதலிய துறைகளில் மனிதன் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதை எடுத்துக் காட்டி, எதிர் காலத்தில் நாட்டின் நிலை எவ்வாறிருக்க வேண்டும் - அரசியல் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிக் காரசாரமாக எழுதப்படும் கட்டுரைகளை, அரசியலில் மாறுபட்ட கருத்தினரும் பாராட்டுவர். சமுதாய அடிப்படையில் எழுப்பிய அவன் கதைகள் வைதீக மனப்பாங்கினரையும் இளகச் செய்து விடும். அவன் நடையில் தமிழ் கொஞ்சி விளையாடும். இவன் எழுத்து வன்மை யைப் பாராட்டிப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவியும். அப்படிப் பாராட்டி எழுதுபவர்களிலே மல்லிகாவும் ஒருத்தி. அவள் திருச்சிக் கல்லூரியிலே பயின்று கொண்டிருப்பவள். நல்ல அழகும் பண்பும் உடையவள். அவளுடைய பாராட்டுக் கடிதம் தவறாமல் வாரந் தோறும் வந்துவிடும். ஒரு முறை அக்கல்லூரிக்கு எக்கோ அழைக்கப் பட்டிருந் தான். அவன் அங்கே சென்று சொற்பொழி வாற்றியதைக் கேட்ட மல்லிகா அவன் தோற்றத்திலும் ஆணித்தரமான பேச்சிலும் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள். அதிலிருந்து எக்கோவுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதத் தவறுவதில்லை. சில நாள்களுக்குப் பிறகு அவளிடமிருந்து வழக்கம் போல் ஒரு கடிதம் அவனுக்கு வந்தது. அதையும் படித்தான். அன்புடையீர்! வணக்கம். நான் இத்தனை கடிதங்கள் எழுதியும் ஒரு விடை கூட உங்களிடமிருந்து வரவில்லையே! ஏன்? எழுத நேரமில்லையா? அல்லது என்னைப் புறக்கணிக்கிறீர்களா? புறக் கணித்தாலும் நான் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. என்னுடைய குறிக்கோளில் - இலட்சியத்தில் நீங்கள் முக்கிய இடம் பெற்று விட்டீர்கள். உங்களுடைய கொள்கைகளில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கல்லூரிக்கு ஐந்து நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அவ்விடுமுறையில் சென்னைக்கு வருகிறேன். உங்கள் மல்லிகா படித்து முடித்துவிட்டு 'இவள் ஏன் நம்மிடம் வர வேண்டும்! ஒருவேளை நம்மிடம் காதல் கொண்டி ருப்பாளோ!' என்று |