பக்கம் எண் :

எக்கோவின் காதல்123

இரவு, படுக்கையில் இருந்தான் எக்கோ.

'ஏன் இரவு சாப்பிடவில்லை! இந்தப் பாலையாவது அருந்து ங்கள்' என்று பாலைக் கொடுத்தாள் மல்லிகா.

படுக்கையிற் சாய்ந்து கொண்டிருந்த எக்கோ அதை வாங்கிக் குடித்தான்.

'ஏன் ஒருமாதிரியாக இருக்கிறீர்கள்?'

'ஒன்றுமில்லை'

மணி பத்தடித்தது. பதினொன்றும் அடித்தது. அவன் அப்படி யே சாய்ந்த வண்ணம் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந் தான். கடிகாரத்தின் 'டக் டக்' ஒலியைத் தவிர வேறு ஒலியே இல்லை அங்கு. அந்த ஒலி ஒவ்வொன்றும் அவன் சிந்தனையைத் தட்டிக்கொடுப்பது போல் இருந்தது. மல்லிகாவும் அருகில் படுத்திருந்தாள்.

'என்ன! நான் பேசுவதற்கெல்லாம் சரியான பதிலையே காணோமே! உங்கள் மனம் காதல் நீரற்ற பாலைவனமா என்ன?' என்றாள்.

'ஆம், என் உள்ளம் பாலைவனந்தான். மக்கள் வாழ்வு பாலைவனமாய் இருக்கும்வரை என்மனம் வறண்ட நிலந்தான். அங்குக் காதல் நீரேது? இன்பப் பூக்கள்தாம் எப்படி மலர முடியும்? அந்த நிலத்தில் மலரைப்பெற விரும்புகிறாய் நீ!'

'இல்லையில்லை; நீர்வளமிக்க சோலையிலேதான் நான் மலரைத் தேடுகிறேன்'

'நீ நினைப்பது தவறு'

'தவறா? அப்படியானால் என்னை மணந்து கொண்டிருக்க வேண்டாமே' என்று ஊடல் கொண்டவள் போல் விளை யாட்டாகக் கேட்டாள்.

'நானா மணந்தேன்? நீயல்லவா என்னை மணந்து கொண் டாய்! நானே மணந்திருந்தாலும் காதலின்பம் ஒன்றுக்காக மட்டும் மணந்து கொள்ளவில்லையே! புரட்சி இயக்கத்தில் நானும் உங்க ளோடு பணியாற்றுவேன் என்று நீ சொல்லியதை உண்மை என்று நம்பினேன் அதனால் உனக்குத் துணைவனாகச் சம்மதித்தேன். என் மனத்தில் காதலுக்குத் தலைமையிடங் கொடுத்தால் தியாகத் தீயில்