பலித்துவிட்டது. அந்தக் காதலிதான் இந்தத் தூதர்களை அனுப்பி யிருக்கிறாள். நான் அவளைக் கண்டு பேசி மகிழப் போகிறேன். நீயும் விரும்பினால் அவளை ஒருநாள் வந்து பார்! நான் போகிறேன்' என்று சொல்லிவிட்டு, அச்சம் ஒரு சிறிதுமின்றி வீரனைப் போலச் செம்மாந்து சென்றான். போலீசாரும் அவனுடன் புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் காலை செய்தித்தாளுடன் ஓடிவந்தாள் மல்லிகாவின் தங்கை மஞ்சுளா. 'அக்கா! அக்கா! இதைப் படித்துப் பார்' என்று பதற்றத் துடன் அவள் கையிற் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தாள் மல்லிகா. 'எக்கோ, அரசாங்கத்திற்கு முரணாக, 'சுடுகாட்டிலே' என்ற கட்டுரையை எழுதியதற்காக ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்! இதைப் படித்ததும் தலை கிறுகிறுத்தது! கடுங்காவல்! எள்ளளவும் கள்ளமில்லாத என் எக்கோவிற்கா கடுங்காவல்! இத்தகைய கொடுங்கோன்மை சுடுகாட்டிலே புதைக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த நாள் வந்தே தீரும்! என்று சொல்லிவிட்டுக் கையைக் கட்டிய வண்ணம் அங்குமிங்கும் உலவினாள். ஏதோ முடிவிற்கு வந்தவள் போல் வெளியே சென்றாள். மறுநாள் மாலை ஒரே கூட்டம். போலீசு அங்குமிங்கும் கைத்தடிகளுடன் உலவிக்கொண்டிருந்தது. துப்பாக்கி தாங்கிய படையும் அணிவகுத்து நின்றது. குறித்த நேரத்தில் கூட்டம் தொடங்கப்பட்டது. மல்லிகா எழுந்து நின்றாள். அவள், கூட்டத் தைச் சுற்றிப் பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தாள். அவள் அப்பொழுது ஒரு படைத்தலைவி போலக் காணப் பட்டாள். 'தோழர்களே! தோழியர்களே! நாம் எழுத்துரிமையற்ற பேச்சுரிமையற்ற நாட்டிலே வாழ்கிறோம். ஏன் எக்கோ கைது செய்யப்பட்டார்? திருடினாரா? கொலை செய்தாரா? அல்லது கொலை கொள்ளை நடத்தும்படி மக்களைத் தூண்டி விட்டாரா? மனித சமுதாயம் உரிமைபெற்று விளங்கவேண்டும் என்று தானே எழுதினார். அவர் என் கணவர் என்பதற்காக நான் கூறவில்லை. அவர் எனக்காக மட்டும் எழுதவில்லை. உங்களுக்காக - உங்கள் சந்ததிக்காகத்தான் இன்று சிறையில் இருக்கிறார். இதுமட்டுமன்று, |