பக்கம் எண் :

எக்கோவின் காதல்129

மல்லிகா கைது செய்யப்பட்டாள். மஞ்சுளா மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். காயமடைந்த மக்களும் எடுத்துச் செல்லப்பட்டனர்.

கூட்டம் நடந்த இடம் இப்பொழுது ஒரே அமைதி! பார்க்க முடியாதபடி சோகம் நிறைந்திருந்தது. இரத்தம் அங்கங்கே சிந்திக் கிடந்தது. ஆனால் அந்த இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நாளைக்கு எத்தனை வீரர்களை - தியாகி களை - எத்தனை எக்கோக்களை - மல்லிகா - மஞ்சுளாக்களை உண்டாக்கப் போகிறது என்று யார் உணரமுடியும்? அந்த இடம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இடம் ஆயிற்று என்பது மட்டுமல்லாமல் மக்கள் நெஞ்ச ஏடுகளிலே இரத்தத்தால் எழுதப்பட்ட எக்கோ நகர் ஆயிற்று.