பக்கம் எண் :

எக்கோவின் காதல்135

'தடை இல்லை என்றா?'

'இல்லை இல்லை; விருப்பம் இல்லை என்று சொல்ல வில்லையே என்றேன்.... சரி.... போங்கள் ... அம்மா....'

'போகிறேன். இரவு மாடிக்கு வருகிறாயா? சில செய்திகள் தனிமையில் உன்னிடம் சொல்ல வேண்டும்' என்றேன். அவளுடைய முறுவல் பூத்தமுகத்தை நாணம் வந்து கவ்விக் கொண்டது.

'ஊர்மிளா!' என்று அவள் முகத்தை நிமிர்த்தினேன்.

'வருகிறாயா?'

உடன்பாட்டைத் தலையசைப்பின் மூலம் தெரிவித்தாள்.

அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு. அத்தையும் வந்து விட்டார்கள். ஆனால் பாழும் அந்த இரவுதான் விரைந்து வரக் காணோம். அப்பொழுதுதான் இலக்கியத்திற் கண்ட 'விரகதாபம்' இன்ன தென்று உணர்ந்தேன்.

எப்படியோ இரவும் வந்துவிட்டது. நள்ளிரவும் வந்து கொண் டிருந்தது. ஆனால் அவள்தான் வரவில்லை. வந்துவிடு வாள் வந்துவிடுவாள் என்று என் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டேயிருந்தன. அவள் வந்தால் எப்படிப் பேச வேண்டும், அகநானூறு முதலியவற்றிற் கண்ட இலக்கிய இன்பம் எவ்வாறுளது என்று காணவேண்டும் - என்றெல்லாம் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

மாடிப்படியில் சத்தம் கேட்டது. ஆம் அவள்தான் வருகிறாள் - மெதுவாகக் காலடியை எடுத்து வைத்து வருகிறாள் - சத்தம் மேல் படிக்கு வந்துவிட்டது. படிச்சத்தமும் நின்றுவிட்டது. சரி, வந்து விட்டாள், நாம் உறங்குவது போல் பாசாங்கு செய்யலாம். நம்மை எப்படி எழுப்புகிறாள் பார்ப்போம் என்று எண்ணிக் கண்களை மூடிக் கொண்டேன். சத்தம் அருகில் கேட்டது. என் துடிப்பு மிக வேகமாயிருந்தது. ஆனால் அவள் என்னை எழுப்பவில்லை. என்னால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியவில்லை. நாமே ... என்று கண்விழித்தேன்.

'உஸ்ஸ் ... உஸ்ஸ் ' சத்தங் கேட்டது. அன்புக்காகத் துடித்த துடிப்பு. அச்சத் துடிப்பாக மாறியது. திரும்பினேன். அந்தப் பழைய வெள்ளை உருவம் தெரிந்தது. அசைந்து அசைந்து ஆடியது. இடையிடையே 'உஸ்ஸ்' சத்தம். திடீரென்று வெள்ளை உருவம்