பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கீழே உட்கார்ந்தது. மனம் பதறியது. உடல் நடுங்கியது. எழுந்து 'லைட்' போட நடந்தேன். மூன்றே மூன்று அடிதான் கால் வைத்திருப் பேன். என்மேல் ஓர் உடம்பு மோதியது. ஐயோ என்றலறிக் கீழே சாய்ந்து விட்டேன். உடனே பட்டப்பகல் போல வெளிச்சம் தெரிந்தது. 'எலக்ட்ரிக் ஸ்விட்ச்' சிலிருந்து கையை எடுத்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

'ஏன் இப்படிச் சத்தம் போட்டீர்கள்?' என்று மெதுவான குரலிற் கேட்டாள்.

'ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டு வெள்ளை உருவம் உட்கார்ந்த பக்கம் பார்த்தேன். ஒன்றையுங் காணவில்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு வேட்டி கிடந்தது. அப்பொழுது தான் உண்மைப் 'பேயை'க் கண்டுபிடித்தேன். அந்த மூலையில் கொடியிற் காய்ந்து கொண்டிருந்த வேட்டி காற்றில் அசைந்தது. அஞ்சிய என் கண்ணுக்கு ஓர் உருவமாகப் புலப்பட்டிருக்கிறது. அது கீழே விழுந்தது. உட்கார்ந்தது போலத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அந்த 'உஸ்ஸ்' எப்படி வந்தது? மாடிப்படியில் சத்தங் கேட்டதே அது எப்படி வந்தது?

'ஏன் இப்படி ஒரு மாதிரி மிரள மிரள விழிக்கிறீர்கள்? என்னைக் கண்டு பயந்து விட்டீர்களா?'

'சேச்சே! பயமாவது ஒண்ணாவது' - என்று சொல்லிக் கொண்டே போய் அந்த வேட்டியை எடுத்து உதறினேன்.

உதறினேனோ இல்லையோ மூலையிலிருந்த உளுந்து மூட்டை க்குப் பின்னாலிருந்து இரண்டு பெருச்சாளிகள் 'உஸ்ஸ்' என்று சத்தமிட்டுக் கொண்டே 'குடுகுடு' வென்று வெளியே ஓடின. உடனே படிகளிற் சத்தங்கேட்டது. அப்பொழுதுதான் என் 'பயம்' விட்டது.

மாடிப்படிகள் மரப்படியானதால் பெருச்சாளிகள் ஏறும் பொழுதும் இறங்கும்பொழுதும் அந்தச் சத்தம் கேட்டிருக் கிறது. ஊர்மிளா வந்து 'லைட்' போடாமல் இருந்தால் பெருச்சாளி, பேயாகி என்னைக் கொன்றிருக்கும். அறிவு வெளிச்சம் ஏற்பட்டால் அல்லவா அறியாமை இருள் நீங்கி உண்மை வெளிப்படும். அதை விடுத்து இருளில் அகப்பட்டுக் கொண்டு ஒன்றை மற்றொன்றாக எண்ணிக் கொண்டிருந்தால் மடியவேண்டியதுதான் என்ற 'சித்தாந்தம்' அந்த வெளிச்சத் திற்றான் எனக்கு ஏற்பட்டது.