பக்கம் எண் :

எக்கோவின் காதல்137

வேட்டியைக் கொடியில் போட்டுவிட்டு வியர்வையையும் துடைத்துக் கொண்டு, 'ஊர்மிளா! வா! உட்கார்!' - என்று கையைப் பிடித்தேன்.

'ம்ம், தொடாதீர்கள் அத்தான்!' என்றாள்.

'பின் ஏன் இங்கு வந்தாய்?' என்றேன்.

'நான் வருவேன் என்று விழித்துக் கொண்டிருப்பீர்களே சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்'.

'இதற்கு வந்திருக்க வேண்டாமே' என்று கொஞ்சங் கோப மாகப் பதில் சொன்னேன்.

'சரி நான் வருகிறேன். அம்மா விழித்துக் கொள்வார்கள்' என்றாள்.

'போவதாயிருந்தால் போகலாம்' என்று சற்றுக் கடுமை யாகவே சொன்னேன். அவள் கண்களிலிருந்து இரண்டு முத்துகள் உதிர்ந்தன.

'ஊர்மிளா' என்று அணைத்தேன்.

'அத்தான்' என்று மார்பிற் சாய்ந்து கொண்டாள்.

அடடா! இன்பம்! இன்பம்! இலக்கிய இன்பம்!

*****

வெளியிற் சென்று உலவிவிட்டு வந்து, வீட்டிற்குள் நுழையும் போது அத்தையும் மாமாவும் ஏதோ உரத்துப் பேசிக் கொண் டிருந்தது என் காதில் விழுந்தது. என்னைப் பற்றிப் பேசுவதாகத் தெரிந்தது. சட்டென்று நின்று கேட்டேன்.

'முடியவே முடியாது, நீ எவ்வளவு சொன்னாலும் நான் சம்மதிக்க மாட்டேன். என் சொத்தென்ன - கௌரவமென்ன - என் பெண்ணை, போயும் போயும் ஒரு தமிழ் வாத்தியாருக்கா கொடுப்பது? ஒருக்காலும் முடியாது. இன்னொருமுறை இந்தப் பேச்சை என்னிடம் பேசாதே!'

தலை சுழன்றது. எவ்வளவுதான் சம்பளத்திலும் மற்ற வகை யிலும் தமிழ் ஆசிரியன் தாழ்த்தப்பட்டிருந்தாலும் அவனுக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? அவனும் மனிதன்தானே! பணம் இல்லை - அழகில்லை - இப்படி ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை. 'தமிழ் வாத்தியார்' அட ! அஃது என்ன அப்படிக்