பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

யாகும். மேலும் அவ்விழாவின் பெயர் 'நவராத்திரி', 'தசரா' என்று பிறமொழிப் பெயராக இருப்பதாலும் இது நம்மவர்க்கு உரியதன்று என மேற்போக்காகக் கருதிவிட்டோம். நுணுகிப் பார்த்திருப்பின் உண்மை புலனாகியிருக்கும். தமிழ்ப் பண்பை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளையும் பிறவற்றையும் தமிழ்ச் சொற்களாற் குறியாமல் பிறமொழிச் சொற்களாற் குறிப்பதால் விளையுந் தீமைகளுள் இதுவும் ஒன்று எனலாம். உண்மையில் இஃது எவர்க் குரியது? என்பதைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆய்ந்து முடிவு காண்போம்.

'நவராத்திரி' என்பதற்கு ஒன்பது இரவுகள் என்பது பொருள். 'தசரா' என்றால் பத்து இரவுகள் என்று பொருள். விழா கொண் டாடும் இரவுகள் ஒன்பதா? பத்தா? என்பது பெயர் வைத்தவர் களுக்கே குழப்பமாக இருந்திருக்க வேண்டும். ஆதலின், அப்பெயரி லேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

பெயரை விடுத்து, இவ் விழாவில் நிகழும் நிகழ்ச்சிகளைச் சிறிது காண்போம். இத் திருநாள் கொண்டாடப் பெறும் நாளில் முதலிடம்பெறுவது கொலு நிகழ்ச்சியேயாகும். இல்லங்களில் அழகிய பொம்மைகளைப் பல வகையாக நிரல்பட வைத்து அழகுறச் செய்வதே கொலுவாகும். அவ்வவர் செல்வ நிலைக் கேற்பவும் கற்பனைத் திறனுக்கேற்பவும் வீடுகளிற் பொம்மை களின் எண்ணிக்கையும் காட்சிப் பொலிவும் அமையும். மக்கள் நாகரிக முதிர்ச்சிக்கேற்பவும் பழக்க வழக்கங்களுக்கேற்பவும் பலவகைக் கோலங்கள் பெற்றுத் திகழும் இக் கொலு நிகழ்ச்சி கண்டு களிக்க வருவோர்க்குத் தின்பண்டங்கள் வழங்கலும் நிகழும். பொம்மைகளை அழகுற அமைத்துக் கொலு வைத்துக்கொண்டு கண்டு மகிழ்வதும் பிறரை மகிழச் செய்வதும் தின்பண் டங்கள் பரிமாறிக் கொள்வதும் குழந்தைகள் பொருட்டுச் செய்யும் செயலா? பெரியவர் பொருட்டுச் செய்யும் செயலா? அவை சிறுவர்க்காகச் செய்யுஞ் செயலே என்பதில் ஐயமே இல்லை. பெரியவர் பொம்மை வைத்து விளை யாடுவது பேதைமையன்றோ? மேலும், பெரியவர் ஆடும் விளை யாட்டை எவர்தாம் கண்டு களிப்பர்?

அடுத்து இத் திருநாளில் பள்ளிச் சிறுவர்கள், கோலாட்டம் அடித்து ஆடுவதும் உண்டு. காண்பார்க்குக் களிப்பூட்டித் தாமும்