140 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
3 கண்மூடி வழக்கம் "என்ன வேலா! எங்கே புறப்படப் போகிறாய்? தடப்புடலாக அலங்காரஞ் செய்து கொள்கிறாயே, எங்காவது விருந்தா?" என்று கேட்டுக் கொண்டே என் நண்பன் வேலனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன். "வாப்பா துரை! நல்லவேளை நீயே வந்து விட்டாய்! ம்...ம்... தலையை வாரிக்கொள்; பவுடர் போட்டுக் கொள் கிறாயா?" என்றான். "அதெல்லாம் ஒன்றும் வேண்டாமப்பா! எங்கே என்று கேட்டால் என்னென்னவோ சொல்கிறாயே!" என்றேன். "வா திருவொற்றியூருக்குப் போகலாம். இன்றைக்குத் தைப் பூசம் அல்லவா! இராமலிங்க வள்ளலார்க்குத் திருவிழா நடை பெறும். அதைப்பார்த்து விட்டு வருவோம். வா!" என்று இழுத்துக் கொண்டு சென்றான். நண்பன் சொல்லைத் தட்டமுடியாமல் நானும் சென்றேன். இரயில் புறப்படும் சமயம் ஓடி ஏறிவிட்டோம். "வேலா! இன்னும் உனக்கு இந்தப் பைத்தியம் விட வில்லையா?" என்றேன். "துரை! பக்கத்து வீட்டுப் பெண்களோடு என் மனைவியும் அங்குச் சென்றிருக்கிறாள். அதனாலேதான் நானும் போகிறேன்" என்றான் வேலன். 'உன் மனைவியைத்தான் ஏன் அனுப்புகிறாய்? உன் வீட்டைக் கூட இந்தச் சிறுவிடயத்தில் திருத்தமுடியவில்லை என்றால் நாட்டை எப்படி நீ திருத்தப்போகிறாய்?" என்று தாக்கிப் பேசினேன். "நண்பா! நீ மற்ற திருவிழாக்களைப் போல இதையும் எண்ணிவிட்டாயா? வள்ளலார் மற்ற நாயனார் ஆழ்வார்களைப் போல அல்லர். சிறந்த சீர்திருத்தக்காரர். சமூக ஊழல்களை |