ஒழித்துக்கட்ட வேண்டுமென்று ஓயாது உழைத்தவர். இதோ ஒன்று உதாரணத்துக்குப் பாரேன். "கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்" என்று எந்த அடியாராவது சொல்லியிருக்கிறாரா? இவர் உறுதி யுடன் இத்தகைய உயர்ந்த கருத்துகளைச் சொன்ன காரணத் தாலேதான், சுயநலக் கூட்டம் இவரை எப்படியோ சரிக்கட்டி விட்டுச் 'சோதி'யில் கலந்து விட்டார் என்று விளம்பரம் செய்து விட்டது. இத்தகைய பெரியாரின் விழாவிற்குச் செல்வதைக் கூடவா நீ வெறுக்கிறாய்?" என்று என்னை மடக்கினான். "அது சீர்திருத்தக்காரர் விழாவானாலும் சரி - சீனிவாசப் பெருமாள் விழாவானாலும் சரி காலம், பொருள் வீணாகிறதே என்றுதான் சொல்லுகிறேன். மேலும் அங்கு என்ன நடக்கிறது பார்த்தாயா? சீர்திருத்த உபதேசமா நடக்கிறது. அடிகள் கூறிய அறிவுரை அங்கு வந்துள்ள பக்தர்களுக்குப் பரிகாசமாக - அலட்சிய மாகப்படுகிறது. அங்குள்ள படத்திற்கு மற்ற கோவில்களில் செய்யும் மரியாதைகளைத் தானே செய்கிறார்கள். நீயும் அப்படியேதான் நடந்து கொள்வாய். அதை விடுத்து ஏதேனும் உபதேசம் செய்யப் போகிறாயோ? இந்தக் 'கண்மூடி வழக்க' மெல்லாம் உன்னளவில் 'மண்மூடிப் போகவில்லையே' என்று கொஞ்சம் ஆவேசமாகவே நான் பேசினேன். 'சரி சரி வந்தது வந்து விட்டோம். இனி என்ன அதைப்பற்றிப் பேசுவது' என்று வேலன் சொல்வதற்குள் திருவொற்றியூரை அடைந் தோம். வண்டியிலிருந்து இறங்கி வேலன் மனைவியும் பக்கத்து வீட்டாரும் தங்கியிருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கப் பெரும் பாடுபட்டுக் கடைசியில் கண்டுபிடித்துவிட்டோம். நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையில் அந்தப் பெண்கள் கூட்டத்தில் ஒரு பாவை மீது என்பார்வை விழுந்தது. அவள் தோற்றம் என் எண்ணத்தைக் கிளறிவிட்டது. "வேலா அந்தப் பெண் யார்?" என்றேன். 'விதவை' என்றான் வேலன். 'அட! அந்தக் கிழவியைக் கேட்கவில்லை. கிழவிக்குப் பக்கத்தில் இருக்கும் கிளியைப் பற்றிக் கேட்கிறேன்.' |