பக்கம் எண் :

எக்கோவின் காதல்145

இனிமேல் நான் நீர். அவள் மீன். நான் தென்றல்; அதில் ஒன்றிவரும் மன்றல் அவள் என்ற முடிவுக்கு வந்தேன்.

'வேலா!வேலா!' என்று அழைத்துக் கொண்டே அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தேன். ஒருவரையும் காணவில்லை.

'வேலா!' என்று மீண்டும் சிறிது உரத்துக் கூவினேன்.

உள் அறையிலிருந்து இல்லை, என்று பதில் வந்தது. அதைத் தொடர்ந்து 'எங்கோ அவசர வேலையாகப் போயிருக் கிறார்' என்ற குரலும் வந்தது. நிமிர்ந்து பார்த்தேன். நிலையைப் பிடித்துக் கொண்டு நீலநிறப் பட்டுடுத்தி நின்றிருந்தாள் புனிதம்.

புனிதம்! இது வியப்பில் வெளிவந்த மூச்சு; பேச்சில்லை!

நிலைத்து நின்ற நான் சமாளித்துக் கொண்டு 'சரி வருகிறேன்' என்று அடி எடுத்து வைத்தேன்.

'இல்லை.... உங்களை.... வந்தால் இருக்கச் சொன்னார்' என்று புனிதம் இழுத்துச் சொன்னாள்.

'மரகதம் எங்கே?' என்றேன். மரகதம் வேலன் மனைவி.

'எதிர்வீட்டிற்குப் போயிருக்கிறாள்' என்று நாணிக்கொண்டு விடையளித்தாள் புனிதம்.

ஒரு வகையாக அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண் டேன்.

உள்ளம் வேகமாக ஓடும் தையல் இயந்திரத்தின் ஊசி போல வேலை செய்தது. வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டேன்.

"இந்தாருங்கள்" என்று சொல்லிக்கொண்டே விசிறியும் காப்பியும் மேசை மீது வைத்தாள். எனக்குக் குழப்பம் அதிகமா யிற்று... இவள் காப்பிதரக் காரணம் என்ன? வேலனும் மரகதமும் எங்கேதான் போயிருப்பார்கள்? என்று என்னென்ன வோ எண்ணி னேன்.

அவள் கதவோரத்தில் கதவைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கி நின்றாள்.

பார்த்தேன்.. பார்த்தாள். சில வினாடிகள் மவுனம்.

'புனிதம்' என்று என் இதயம் பேசியது. என் உதடுகள் என் உள்ளத்தை அவளுக்குத் திறந்து காட்டின.

அவள் முகத்தாமரை மலர்ந்தது. இதழ்கள் அசைந்தன. என் கண் வண்டு பறந்தோடிப் பாய்ந்தது. வண்டைத் தொடர்ந்து