148 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
4 சந்தேக முடிவு மெருகு குலையாத மோட்டாரில் வந்திறங்கினார் கோடீசு வரர் கோபாலன். "வாங்கோ! வாங்கோ! உங்களுக்காகத்தான் வந்து காத்திண் டிருக்கேன். வரச் சொன்னேளாமே!" என்று குழைந்து எழுந்து நின்றார் பஞ்சாங்கம் பரமேசுவர ஐயர். "ஆமாங்க சாமி! உங்ளே வாங்க!" என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் முதலியார். பின் தொடர்ந்தார் ஐயர். ஒரு கட்டு நோட்டுப் புத்தகத்தை ஐயருக்கு முன் தூக்கிப் போட்டு விட்டு முதலியாரும் உட்கார்ந்தார். "சாமி! இந்தச் சாதகங்களை எல்லாம் கொஞ்சம் கவனமாகப் பார்க்க வேண்டும்." "அடடா! என்ன அப்படிச் சொல்றேள்! உங்க விஷயத்திலே அசிரத்தையா? என் சொந்த விஷயம் போலேன்னோ கவனிச் சிண்டிருக்கேன்." "ஆமா! முன்னே கூட அப்படித்தான் சொன்னீர்கள்! எல்லாப் பொருத்தமும் நன்றாயிருக்கிறது என்றீர்! ஒன்றுக்கு மூன்று போச்சு. அதனாலே கொஞ்சம் கவனமாக இதைப் பாருங்கோ!" "அஃது அவா தலைவிதி! அதுக்கு நாமென்ன பண்றது!" "அந்தத் தலைவிதி சாதகத்திலே முன்னாடியே தெரியாதோ?" சரி சரி, சாதகத்தைப் பாருமையா! "இது பேஷான சாதகமாச்சே" "எதைச் சொல்கிறீர்! சீனிவாச முதலியார் வீட்டுச் சாதகத்தை யா? சாதகம் நல்லாத்தான் இருக்கிறது. நல்ல அழகான நோட்டிலே அச்சுப் போல எழுதி இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு வயது பதினாறு ஆகிறதையா. கொஞ்சம் நிறமும் கூட மட்டம். அந்த ரத்தின முதலியார் வீட்டுச் சாதகத்தைப் பாரும். வயது பதின் |