மூன்றுதான்; பருவமாகி ஆறுமாதங்கள் ஆகின்றன; நல்ல சிவப்பு, அழகு; பணந்தான்... அதைப் பற்றிப் பரவாயில்லை. அந்தச் சாதகத்தைப் பாரும் எப்படி என்று!" "ஆஹாஹா! ஜாதகம்னா இதுன்னா ஜாதகம்! பேஷ் பேஷ்! என்ன பொருத்தம் போங்கோ! முதலியார்வாள்! கட்டாயம் இதையே முடித்துக் கொள்ளுங்கள்." "சரி, நல்ல முகூர்த்த நாளொன்று பார்த்துச் சொல்லும் மையா!" ***** கோடீசுவரர் என்றாலே குந்தளபுரம் எங்கும் தெரியும். உண்மையிலேயே கோடிக் கணக்கில் பணம் உண்டு அவருக்கும். நல்ல ஐயர்களைக் கொண்டு சாதகங்கள் பார்க்கப்பட்டுச் சிறப்பான முறையில்தான் திருமணம் நடந்தது. நோயினாலும் பிள்ளைப் பேற்றாலும் இருமனைவியர் இறந்தனர். மூன்றாம் மனைவி, பெற்றோர்கள் கட்டாயப் படுத்தியதால் அவரை மணந்து கொண் டாள். மணந்தும் சரியான முறையில் அன்போடு அவருடன் பழகவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் ஒருநாள் தற்கொலை செய்து கொண்டாள். மூன்றாம் மனைவி இறந்து மூன்று மாதங்கள் கூட நிரம்ப வில்லை. நான்காம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் தொடங்கப் பட்டன. அவர் சும்மாயிருந்தாலும் பெண்வீட்டார் சும்மாயிருக்க விடவில்லை. சிபாரிசுக்கு மேல் சிபாரிசு! பணக்காரர் அல்லவா! எப்படியாவது பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்தால் போதும் என்று சாதகங்கள் வந்து குவிந்தன. இந்த நான்காவது மணத்திற்குத் தான் மேலே பஞ்சாங்க ஆராய்ச்சி நடந்தது. மணமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோடீசுவரர் வீட்டுக் கலியாணமென்றால் கூட்டத்திற்கும் குதூகலத்திற்கும் கேட்கவா வேண்டும்! கூட்டத்திலிருந்தோர் மணத்திற்குச் செலவழிந்த தொகை யைப் பற்றியும் பண்டபாத்திரங்களைப் பற்றியும் இசை மன்னர் களின் இசையரங்குகளைப் பற்றியும், அதைக் காண வந்த மக்கள் திரளையும், நகைகளையும் இன்னும் இவை போன்றவைகளையும் பற்றித்தான் பேசிக் கொண்டார்களே ஒழிய, அந்தப் பெண் |