பக்கம் எண் :

எக்கோவின் காதல்151

"சாவியை என்னிடம் நம்பிக் கொடுக்கிறீர்களே! நான் யாருக்காவது எதையாவது எடுத்துக் கொடுத்துவிட்டால்...!"

அட, பைத்தியமே! இதெல்லாம் உன் சொத்து; இதைக் காப்பதும் காப்பாற்றாததும் உன் பொறுப்புத் தானே" என்று கொஞ்சுதலாகக் கூறினார்.

"இங்கே வா! மங்களம்; இந்த "ரேடியோ"வைத் திருப்பப் பழகிக் கொள்! நானில்லாதபோது நீ திருப்பலாமல்லவா? இதை இப்படித் திருப்பிவிட்டால் போதும் உடனே பாடும்" என்று திருப்பினார்.

வானொலி பாடத் தொடங்கியது.

"மன்மதன் லீலையை வென்றாருண்டோ" என்ற இசைத் தட்டின் பாட்டுக் கேட்டது. முதலியார் வயதையும் மறந்தார். இளமையைப் பெற்றார். அந்தப் பருவம் விளையாடத் தொடங்கியது.

முதலியாருக்குத் தனக்குத்தானே ஒரு சந்தேகம்; நமக்கு வயது அய்ம்பத்து மூன்று ஆகிவிட்டதே. அவள் பதின்மூன்று வயதுப் பெண். நம்மிடம் அன்பாக இருப்பாளா? நாம்தான் அவள் அன்பிற் கேற்ப நடந்து கொள்ள முடியுமா? என்று. இதற்காகத்தான் குங்குமப்பூ முதலியவற்றின் உதவியை நாடினார். தன்னால் இன்பந்தர இயலாவிட்டாலும், வைரநகை - பணம் - வானொலி இவை களாவது இன்பந் தரட்டும் என்று எண்ணித்தான் அவ்வளவு தாராளமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நாள் தோறும் முகவழிப்பு, வாசனைப் பூச்சுகள் தவறுவதில்லை. தன் முகத்திலுள்ள இரண்டொரு நரையும், சுருங்கலும் அவளுக்கு அருவருப்பைத் தந்துவிடக் கூடாது என்று அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்தப் பெண்ணும் அன்பாக - ஒழுங்காக நடந்து வந்தாள். அவள் வீட்டார் செய்த 'உபதேசத்'தாலும் நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்ற எண்ணத் தாலும் அப்படி நடந்து வந்தாள். இடையில் மனம், பருவத்தின் இயற்கையால் மாறுபட்டு வருந்தினால் சமாதானத்திற்குத்தான் "விதி" என்ற மந்திரம் இருக் கிறதே. அதை 'உச்சரித்து'க் கொள்வாள்.

ஒருநாள் மாடியில் நிலைக் கண்ணாடியில் இருவரும் நின்று தங்கள் அழகைப் பார்த்தார்கள். முதலியார் உள்ளம் குபீர் என்றது. இதற்கு முன்பு தன் முகத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்திருக்