பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

நேரே மாடிக்குச் சென்றார். நாற்காலியில் சாய்ந்தார். சிந்தனையில் ஆழ்ந்தார்.

*****

"னக்கு அடுக்குமா என்றா கேட்கிறீர்? சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்! என் வயதென்ன! உங்கள் வயதென்ன! என்னை மணந்து கொண்டது உமக்கு அடுக்குமா? சரி; பாவம் புண்ணியம் என்றெல்லாம் பேசுகிறீரே! அவற்றை நம்பியிருந்தால் என்னை மணப்பது பாவம் என்று உங்களுக்கு ஏன் தெரிய வில்லை?"

"அடி பாதகி! அதற்காக மகன் என்று கூடவா பார்க்கக் கூடாது? இப்படி நடந்து விட்டாயே! நான் ஒருவன் மரம் போல இருக்கிறேன் என்பதையும் மறந்துவிட்டாயா?"

"இல்லை! மறந்துவிடவில்லை! உண்மையில் நீங்கள் என் வாழ்வில் மரம் என்பதை நினைத்துத்தான் இப்படிச் செய்தேன். மகன் என்கிறீர்! யாருக்கு மகன்? அவர் வயதென்ன? யாராவது ஒப்புக் கொள்வார்களா?இல்லை - உங்களையும் என்னையும் தான் கணவன் மனைவி என்றால் நம்புவார்களா? பேத்தி என்றால் ஒரு வேளை நம்பலாம். மகன் என்று நீர் சொல்லும் அவர் எனக் கேற்றவர். வறண்து கிடந்த பாலை நிலத்தில் பாலை ஊற்றினார். பூச்செடியும் வளர்கிறது. செடியை வளர்க்க நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. - உலகம் தூற்றும் , உண்மையை உணராது. ஆதலால் நான் வீட்டிலேயே ..."

"ஐயோ தெய்வமே! எனக்கா இந்தக் கதி வரவேண்டும்! சொல்லப்போனால் காளி போலப் பேசுகிறாளே! எனக்கே.. என் மானத்திற்கே குழி தோண்டுகிறாளே! பாம்பையல்லவா வீட்டில் வளர்க்கிறேன்."

இவை சிந்தனையில் ஆழ்ந்திருந்த முதலியாரின் மனப் போராட்டம்.

போராட்டத்தின் முடிவில் "ஆம்; அவள் நிலைக்கும் என் நிலைக்கும் பொருத்தம் இல்லைதான். சாதகத்தில் ஏதோ பொருத்தம் சொன்னான். ஆனால் உள்ளப் பொருத்தமில்லை. எந்தப் பொருத் தமுமே இல்லை. அவள் ஓர் இளங்கொடி, பக்கத்திலே இருக்கும் கொம்பிலே தாவிப் படராதிருக்குமா? அவள் பூத்துக் குலுங்கும் செடி. வண்டு மொய்க்காதிருக்குமா? அவள் காண வேண்டிய பருவ