156 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
சிறிய ஒலிதான். இருந்தாலும் உறங்காமலே இருந்த முதலியார் செவியில் அவ்வொலி விழுந்தது. ஒலி வந்த திசை நோக்கி நடந்தார். தன் மகன் அறையிலிருந்து தான் அந்த ஒலி வந்தது என்பதை மெய்ப்பித்து விட்டது. அங்கிருந்து வரும் பேச்சொலி பூத்துக் காய்த்திருந்த அந்த எண்ணம் பழுக்கத் தொடங்கிவிட்டது. கதவின் துவாரத்தின் வழியாகப் பார்த்தார். இருவுருவங்கள் தெரிந்தன. படுக்கையறை வெளிச்சத்தால் சரியாகத் தெரிய வில்லை. பேச்சை உற்றுக் கேட்டார். "எனக்குப் பயமாகவே இருக்கிறது. அவர் பார்த்து விட்டால் என்ன ஆகும்" இது பெண் குரல். "நானிருக்கும் பொழுது உனக்கென்ன பயம்?" அவர் பார்த் தால் தான் என்ன? இனி மேல் நீ என் மனைவி. ஏதாவது தடை ஏற்பட்டால் நாம் சிங்கப்பூருக்குச் சென்று விடலாம்" இஃது ஆண் குரல். இதற்கு மேல் அவர் கேட்டுக் கொண்டிருக்க முடிய வில்லை. பழம் பயன் தரத் தொடங்கிவிட்டது. "என்ன துணிச்சல்! இனி அவள் உன் மனைவியா?... சிங்கப் பூருக்கா செல்கிறாய். வேண்டாம். நானே உங்களைச் சொர்க்கத் திற்கு அனுப்புகிறேன்" என்று துடிதுடித்துக் கொண்டு சந்தடி செய்யாமல் அறைக்குச் சென்று கைத்துப்பாக்கியை எடுத்து வந்தார். மகன் அறையில் ஒரு சன்னல் கதவு சிறிது திறந்திருப்பதைப் பார்த்தார். அதன் வழியாக உள்ளே பார்த்தார். அவர் கண்கள் கூசின. நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது. துப்பாக்கியை நீட்டினார். கண்களை மூடிக் கொண்டார். விசையைத் தட்டினார். "படார் படார்" என்ற சத்தம், குறி தவறி அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பட்டது. எங்கும் ஒரே வெளிச்சம். மாடியிலிருந்து ஓடி வந்தாள் மங்களம். துப்பாக்கியை மறைத்துக்கொண்டு பித்தன் போல் நின்று கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். "என்ன இது? ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என்ன சத்தம்?" என்று பதற்றடத்துடன் கேட்டாள். |