பக்கம் எண் :

எக்கோவின் காதல்157

அவளைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"அப்படியானால் உள்ளே நம்மால் சுடப்பட்டது யார்?" இது முதலியார் பெருமூச்சோடு கலந்து வந்த ஐயம்.

மகனும் கதவைத் திறந்து கொண்டு வந்து இதென்ன அப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஒன்றும் பேசவில்லை.

மங்களம் அவர் கையைப் பிடித்துக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டாள்.

மணி நான்கு அடித்து விட்டது.

முதலியார் மகன், கட்டிலின் கீழ் மறைந்து நடுங்கிக் கொண் டிருந்த தன் காதலியை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தான். வெளிக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு முதலியார் மாடிச் சன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தார்.

தன் மகன் எதிர்த்த வீட்டுப் பெண் வசந்த கோகிலத்தை அங்கே கொண்டு போய் விட்டுத் திரும்புவதை வீதி வெளிச்சத்தால் பார்த்தார்.

'அப்பாடா' என்று திரும்பினார்.

அந்த மரம் - சந்தேக மரம் அடியோடு சாய்ந்தது. மனப்பாரம் குறைந்தது. பித்தமும் தெளிந்தது.

"மங்களம்! மங்களம்" என்றார். அப்பொழுது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்திருந்தது.