160 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
எங்கள் ஊருக்குச் சென்று விட்டோம். சில மாதங்களுக்குப் பின் சென்னை சென்று திரும்பி வந்தேன். நண்பன் மாறனைப் பார்க்கச் சென்றேன். என் முகத்தில் வெற்றிக்குறி விளையாடுவதைக் கண்டு "என்ன சுந்தரம்! எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டதோ" என்றான். "ஆம் எதிர்பார்த்ததுதான். ஆனால் நான் சென்னை செல்லும் பொழுது எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் என் எண்ணம் நிறைவேறிவிட்டது" என்றேன். "என்ன...ஒரு.. நாலாயிரமாவது கிடைத்திருக்குமா? இருந்தாலும் சுந்தரம்! நீ ஒரு தேசியவாதியாயிருந்து கொண்டு "இந்தக் கள்ள மார்க்கெட் வியாபாரம் செய்யக்கூடாதப்பா!" "மாறா! அதை நான் சொல்லவில்லை. வியாபாரத்திற்கும் தேசியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது கிடக்கட்டும். நான் சொல்வது வேறு. கடைமுழுக்கன்று பார்த்தோமே ஒரு பெண்ணை. அது முதல் பரிதவித்துக் கொண்டிருந்தது என் மனம். அவளை அடையமுடியுமா? அவள் எங்கிருக்கிறாளோ? யாரோ? எந்த ஊரோ? என்று ஏங்கிக் கொண்டிருந்த உள்ளத் திற்குச் சாந்தி கிடைத்தது" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது குறுக் கிட்டுப் பேசத் தொடங்கினான், மாறன். "என்ன என்ன! மழைபெய்யும்போது பார்த்த பெண்ணா? சாந்தி கிடைத்ததா! அந்தப் பெண்ணை மறுபடியும் பார்த்தாயா என்ன நடந்தது? விளக்கமாகச் சொல் சுந்தரம்" என்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். "கேள்! உற்சாகமாகக் கேள்! நான் சென்னையில் பைத்தியக் காரனைப் பார்க்கச் சென்றேன்..." "என்ன சுந்தரம்! நான் கேட்பதைவிட்டுப் பைத்தியக் காரனையும் அவனையும் இவனையும் பற்றிச் சொல்லுகிறாயே" என்று கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான். "அட, என்னப்பா! சொல்வதற்குள் துடிக்கிறாயே! விவர மாகச் சொல்ல வேண்டாமா?" "விவரமாகச் சொல்லுவதற்குப் பைத்தியக்காரனைப் பார்க்கப் போனேன் என்று தான் சொல்ல வேண்டுமா?" |