கடிதங்களைப் பிரித்தேன். சென்னை என்று எழுதியிருந்தது. உடனே இன்னும் என் கவனத்தைக் கவர்ந்தது. எல்லாவற்றையும் எடுத்தேன். பிரித்தேன். அன்புமிக்க அம்மா? என்னை இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் காலில் கட்டி விட்டீர் களே! என் வாழ்வெல்லாம் பாழாகத்தானே இப்படிச் செய்தீர்கள்! என்ன சுகத்தைக் கண்டேன் இவரைக் கட்டி? கலியாணமாவதற்கு முன் என்னவெல்லாம் நினைத்தேன். அந்த ஆசையெல்லாம் மண்ணாயிற்று. நல்ல புடவையுண்டா? நகையுண்டா? ஒன்று மில்லை! பக்கத்து வீட்டுப் பெண்கள் தங்கள் கணவருடன் சினிமா விற்குப் போகும்போதெல்லாம் என் மனம் என்ன பாடுபடுந் தெரியுமா? அவர்கள் கூடிச் செல்வதைப் பற்றியோ சினிமாவிற்கு நாமும் போகவில்லையே என்பதைப் பற்றியோ நான் பொறாமை கொள்ளவில்லை. அப்பொழுது அந்தப் பெண்கள் உடுத்துள்ள ஆடையும், நகைகளும் என்னை அப்படியே உருக்கிவிடும். பாவம்! அவருந்தான் என்ன செய்வார்? அவர் தமிழ் ஆசிரியர்! சம்பளமோ மிகக்குறைவு. சாப்பாட்டிற்கும் வீட்டு வாடகைக்குமே சரியாகிவிடும். அப்புறம் நகைக்கெங்கே போவது? அஃது என் தலையெழுத்து. இப்படிக்கு, வள்ளி சென்னை. ***** அம்மா! உங்கள் கடிதம் கிடைத்தது. வருத்தப்பட வேண்டாம்; என்று எழுதியிருக்கிறீர்கள். அதன்படியே நடந்து கொள்ளுகிறேன். ஆனால் அவரே என் வருத்தத்தைப் போக்கிவிட்டார். நகைகள் செய்தல்ல. அன்பு செய்து என்னை மகிழச் செய்கிறார். என் முகம் சிறிது வாட விடமாட்டார். அவர் செய்யுந் தலையன்பு என்நகைப் பைத்தியத்தை நீக்கிவிட்டது. இதமாகப் பேசிப் பேசிச் சிரிக்க வைத்து விடுகிறார். இருந்தாலும் நானும் பெண்தானே! எப்பொழுதாவது புடவை நினைப்பு வந்து விடும். உடனே அவர் கண்டு கொள்வார். கவலைப் படாதே! இன்னும் ஐந்துநாளில் புதுப்புடவை எடுத்து வருகிறேன் |