172 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
அம்மா! இப்பொழுது எழுதும் இந்தக் கடிதம் வீட்டிலிருந்து எழுத வில்லை. சிறைக்குள்ளிருந்து எழுதுகிறேன். அவர் ஒரு பக்கம் சிறையுள் கிடக்கிறார். நான் ஒரு பக்கம் அடைபட்டுக் கிடக்கிறேன். நாங்கள் மட்டுமில்லை. உங்கள் பேரன் - மெய்யழகன் ஆறுமாதம் நிரம்பப் பெறாத கைக்குழந்தையும் சிறைக்குள்ளே என்னுடன் தான் இருக்கிறான். குடும்பத்துடன் சிறைப்பட என்ன குற்றம் செய்திருப்பார் கள் என்று எண்ணலாம்; பெருங்குற்றந்தான் செய்தோம். இன்றுள்ள சட்டப்படி அரசாங்கத்தை எதிர்த்தோம் என்று குற்றம் சாட்டப் பட்டோம். ஆம், அரசாங்கம் இந்தியைத் திணித்தது. தமிழர்கள் எதிர்த்தார்கள். தாய்மொழியே தெரியாத மக்கள் வாழும் நாட்டில் மற்றொரு மொழியைப் புகுத்த ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று. அந்தப் படையில் உங்கள் மருமகனும் சேர்ந்தார். கைது செய்யப் பட்டார். பெண்கள் படையும் திரண்டது. அதில் நானும் பங்கு கொண்டேன். ஆண்மை மிக்க அரசாங்கம் என்னையும் சிறைப் படுத்தியது. நீ நினைப்பாய் கடவுளைப் பற்றியெல்லாம் என்னென் னவோ எழுதினாள், நாத்திகம் பேசினாள். அதன் விளைவுதான் இது என்று. அது தவறு. ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கம் திமிர் கொண்டு இதைச் செய்தால் இதை ஏன் கடவுள் மீது ஏற்றவேண்டும்? தாய்மொழி வளர வேண்டுமென்று சொன்னால் அதற்குத் தண்டனை தரும் அரசு இருந்தாலென்ன இறந்தாலென்ன? ஆனால் சிறைப் பட்டதற்கு மகிழத்தான் செய்கிறேன். தமிழுக்குத் தொண்டு செய்தோமே என்று. அதைவிட என் மகனும் இந்தி எதிர்ப்புப் போரிலே சிறை சென்றான் என்று பெரிதும் மகிழ்கின்றேன். இந்தக் கடிதம் உன் கைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ, தெரிய வில்லை. காக்கை சென்னை ***** |