பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"என்ன பொதுக்கூட்டம்?"

"திராவிடர் கழகப் பொதுக் கூட்டம். தலைவர் பட்டுக் கோட்டைப் பக்கிரிசாமி; கிருஷ்ணனும் வருகிறார்".

"கிருஷ்ணனா! அவர் காங்கிரசில் இருப்பவராயிற்றே!" என்று வியப்புடன் கேட்டாள் மதுரம்.

"நீங்கள் நினைக்கும் அந்தக் கிருஷ்ணனில்லை.. நான் சொல்வது நகைச்சுவை மன்னரை".

"ஓ! அவரா! அதுசரி...! நான் வேறு கட்சியில் விருப்பங் கொண்டவளாயிற்றே! என்னைத் திராவிடர் கழகக் கொடியேற்ற அழைக்கின்றீர்களே!"

"அம்மையே இரண்டு கழகத்திற்கும் பெரிதும் வேற்றுமை யேயில்லை. உங்கள் கட்சி பொருளாதாரத்தில் பொதுமை காண விழைகிறது. திராவிடர் கழகம் பணம் -சாதி - மதம் முதலிய எத்துறையிலும் சமதர்மம் காணப்பாடுபடுகிறது. ஆக இரண்டின் நோக்கமும் சமதர்மந்தான்..."

"அது சரி! அது எப்படியிருந்தாலும் நீங்கள் விரும்புவதைத் தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஆகட்டும் இருங்கள் இதோ வருகிறேன்... இந்தக் காப்பியைச் சாப்பிடுங்கள்!" என்று நீட்டினாள்.

அவன் 'டம்ளரை'ப் பற்றினான். அவள் பிடியை விடாமல் அவனையே பார்த்தாள். அவன் 'என்ன' என்று நிமிர்ந்தான். அவள் பார்வையில் ஒரு விதச் சோகம் கப்பிக் கொண்டிருந்தது.

"சகோதரி! ஏன் இப்படி...?"

"இனிமேல் சகோதரி என்று அழைக்காதீர்கள்! எனக்கென்ன பேரா இல்லை?" என்று அவள் நளினமாகப் பேசியதிலிருந்து அவள் கருத்தை நன்கு புரிந்து கொண்டான்.

"மதுரம்! நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள்"

"இல்லை; இனிமேல் அப்படிச் செல்லவில்லை. இன்று முதல் நான் உங்கள் கழகத்தில் சேர்ந்து விடுகிறேன்."

"அதை நான் சொல்லவில்லை!"

"பின் எதைச் சொல்கிறீர்கள்? நான் இதுவரை தவறிய தில்லையே!"

"இருக்கலாம்! இப்பொழுது என்னளவில் தவறாக.."