மயக்கம் சிறிது தெளிந்து மெதுவாகக் கண்ணைத் திறந்தான். "நான் எங்கிருக்கிறேன்" "மருத்துவ விடுதியில்" "யார்? மதுரமா?" "ஆம்; உங்கள் எதிரி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டாராம்" "கிருஷ்ணன்! ஐயோ! பாவம்! அவனா என் எதிரி? அவனு டைய அறியாமையல்லவா என் எதிரி"! அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. "இரணியன் - பிரகலாதன், இராவணன்-வீடணன், வாலி - சுக்கிரீவன் இவர்கள் இந்த நாட்டிலே உலவும் வரையில் 'கிருஷ் ணார்ச்சுன யுத்தம்' நடந்துதான் தீரும். நான் யார்? அவன் யார்? என்ற எண்ணம் தோன்றித் தெளிவு பிறக்கும்வரை இந்தக் கதிதான்" என்று எண்ணிக் கொண்டே படுத்திருந்த அர்ச்சுனனுக்கு மதுரம் மருந்தை எடுத்துக் கொடுத்தாள்; தன் எண்ணத்திற்கு அவன் மருந்து தருவான் என்ற உறுதியோடு. |