186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
8 அணைந்த விளக்கு அவள் என் குடும்ப விளக்காக விளங்குவாள் என்று எண்ணி னேன். ஆனால், அவள் அணைந்த விளக்கு. இருந்தாலும் பரவா யில்லை, மீண்டும் ஒளி பெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்து விட்டாள். வழக்கம் போல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றேன். நெடுநேரம் ஆகியும் அவள் வரவில்லை. வேறு இடங்களிலும் உட்காரமாட்டாள். ஒரு மாதமாக இதே இடந்தான். நானும் அதற்கு அருகிலேயே பதிவு செய்து கொண்டேன். ஆனால், இன்று இன்னும் வரவில்லை. அவளைப் பார்க்காவிட்டால் அந்த நாள் என் வாழ்நாளில் பாழ்நாள்! அவ்வளவு துன்பமாக இருந்தது. கதிரவன் மறைந்து கொண்டிருந் தான். மஞ்சட்கதிர்களை மணற்பரப்பில் செலுத்திக் கொண் டிருக்கும் காட்சி மனத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருந்தது. இருந்தாலும் இருள் கவிந்து விட்டால் அவள் வரமாட்டாளே என்ற கவலை மிகுதி எனக்கு. ஆனால், கவலை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. அவள் வந்து விட்ட காரணத்தால் சிவந்த மேனியில் கருப்பு நிற உடை ஓர் தனி அழகு தந்தது, அவளுக்கு. எனக்கும் அதுதான் மிகப் பிடித்த மாயிருந்தது. ஆனால், சிற்சில சமயங்களில் பூச் சிதறிய ஆடையும் பொலிவு பெறும்; அவள் உடலிற் சேர்ந்து. காது, மூக்கு, கழுத்து எதிலும் ஒரு நகைகூட இல்லை. கையில் ஒன்றோ, இரண்டோ வளையல் மட்டும் ஊசலாடும். அதுவும் கருப்புத் தான்! ஆனால், அவள் உள்ளத்தில் கருப்பில்லை என்பதை அவள் முகப்பொலிவு நன்றாக எனக்குச் சொல்லிற்று. அந்த விழியின் கருப்புத்தான் என்னை மயங்கச் செய்தது. அவள் கசங்காத மலர்! இது, என் எண்ணம். அவளிடத்துக் கொண்ட காதலால்தான் நான் நாள் தவறாது கடற்கரைக்குச் செல்வது. பலரும் அப்படித்தானே! கடலின் அழகிலே ஈடுபட்டு, காற்றின் நலத்திலே ஒன்றுபட்டுச் செல்வோர் எத்துணைப்பேர்? காதலின் விளையாட்டுப் பண்ணை |