பக்கம் எண் :

எக்கோவின் காதல்187

தானே கடற்கரை! அந்தப் பண்ணையில் நான் மட்டும் இடம் பெறாமலிருக்க முடியுமா என்ன?

நான் தான் அவளிடம் காதல் கொண்டேன். அவள் விரும்பி னாளோ என்னவோ எனக்குத் தெரியாது. நாங்கள் இன்னும் வாய்ப்பேச்சுக் கூடப் பேசியது கிடையாதே! நான் அவளைப் பார்ப்பேன். அவளும் என்னைப் பார்ப்பாள்; என்னைப் போல அல்ல. அவள் பார்வையிலே அமைதி தான் இருக்கும். அதை நானெங்கே பொருட்படுத்தப் போகிறேன். நான் காதல் நோக்குத் தான் நோக்குவேன். எப்படியும் அவளிடம் பேசி விட வேண்டு மென்பது என் எண்ணம். ஆனால், துணிவு வரவில்லை. இன்று அந்த எண்ணம் நிறைவேறியது. காரணம், என் மடிமீதிருந்த அந்தப் புத்தகந்தான்!

அவள் வந்து உட்கார்ந்ததும் கடலைப் பார்த்துவிட்டு என்னை யும் நோக்கினாள். பார்வை, என் மடிமீதிருந்த புத்தகத்தின் மீது விழுந்தது. நான் அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தேன். பேசி விட்டாள் அவள்.

'அது, என்ன புத்தகம்?'

செயலற்றவனாய்க், 'காதல்நினைவுகள்' என்று கையிற் கொடுத்தேன்; சற்று அருகில் வந்து புரட்டினாள் அவள். என் உள்ளம் - ஏன் - உலகமே புரண்டது போலத் தோன்றியது எனக்கு. என் காதல் நினைவுகளை என்று நீ அறிவாயோ என்று மனத்திற்கு சொல்லிக் கொண்டேன். அந்த நூலின் ஆசிரியருக்கு என் மனமார வாழ்த்துக் கூறினேன்; அவளோடு பேச வாய்ப்புத் தந்த காரணத்திற் காக.

அவள் புரட்டி விட்டு, 'இதை நாளைக்குத் தருகிறேனே! ' என்றாள்.

தலையை ஆட்டினேன்.

இருள் வந்து எங்களைப் பிரித்து விட்டது. அன்று இரவெல்லாம் உறக்கம் ஏது? மறுநாள் அவளுக்குக் கொடுப்பதற்காக ஒரு புத்தகத் தைப் பொறுக்கி எடுத்தேன். மாலை ஐந்து மணிக்கே கடற்கரை சென்றேன். அங்கே எனக்கு முன்பே அவள் காத்துக் கொண்டிருந் தாள். அருகிற் சென்றதும் புத்தகத்தைத் தந்தாள். நன்றியறிதலுடன் நானும் சிரித்துக் கொண்டே வாங்கினேன். குறும்புத் தனமாக