பக்கம் எண் :

192கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

"அவமானச் சின்னம்! நானா அவமானச் சின்னம்? ஏன்? அவர்களையே போய்க் கேட்டு விடலாமா? சேச்சே! வேண்டாம். அவர்களைக் கேட்கக் கூடாது. அவர்கள் என் உண்மை நண்பர் களாயிற்றே! அப்படியிருந்தும் என்னை அவமானச் சின்னம் என்று ஏன் கூறினார்கள்? வேறு யாரையும் சொல்லி யிருப்பார்களோ? இல்லை என் பெயரைச் சொன்னது நன்றாக என் காதில் விழுந்ததே" என்ற எண்ண அலைகள் அவன் நெஞ்சத்தில் விடாமல் மோதிக் கொண்டிருந்தன. பித்துப் பிடித்தவன் போல் நடந்து கொண் டிருந்தான். எதிரில் வருவார் போவாரையும் கவனியாது வீட்டை யடைந்தான்.

"கண்ணப்பா!கண்ணப்பா!"

பேச்சில்லை.

"தூங்கிவிட்டானோ! கண்ணப்பா! மணி ஒன்பது ஆகிவிட்டது. இன்னும் சாப்பிடாமல் என்ன படிப்பு வேண்டி யிருக்கிறது? சாப்பிட்டு விட்டுப் படிக்க கூடாதோ?" என்று சொல்லிக் கொண்டே கண்ணப்பன் அறையை நோக்கி வந்தாள் அவன் தாய் இலட்சுமி.

நாற்காலியில் சாய்ந்த வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந் தான் அவன். முகம் கறுத்திருந்தது. கவலையின் குறிகள் நன்கு புலப்பட்டன மின்சாரவெளிச்சத்தால்.

"கண்ணப்பா!"

"ஏன் அம்மா!" என்று திடுக்கிட்டு எழுந்தான்.

"சாப்பிடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

"பசியில்லையம்மா; சாப்பாடு வேண்டாம்"

"ஏண்டா தம்பி ஒருமாதிரியிருக்கிறாய்? உனக்கென்ன கவலை? அப்பா ஏதாவது சொன்னாரா? உனக்கு ஏதாவது வேண்டு மென்றால் என்னைக் கேட்கப் படாதோ?"

"இல்லையம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது. பசியும் இல்லை"

"இல்லையில்லை. ஏதோ வருத்தமாயிருக்கிறாய், நன்றாகத் தெரிகிறது. நீ சாப்பிடாவிட்டால் எனக்குச் சாப்பிட மனம் வருமா? வாப்பா! கொஞ்சமாவது சாப்பிடு. என்ன கவலை என்று தான் சொல்லேன். என்னிடம் சொல்ல ஏன் மறுக்கிறாய்? எனக்கு நீ ஒரே