பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

அந்தோ! அவன் வறுமையிலேயே இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ வளமான பாடல்களைப் பெற்றிருக்குமே தமிழகம்! பணம் அவனைக் கெடுத்துவிட்டது... இல்லை.... நான்தான் அவனைக் கெடுத்துவிட்டேன். பணக்காரனாக்கியது நான்தான். அதனால்தான் அவன் கெட்டுவிட்டான்.

போற்றுவாரின்றி அழிந்து விடுமோ இந்தப் புரட்சிக் கவிதைகள் என்று அன்று வருந்தினேன். இன்று அவன் புகழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இவன் மாறியதால் புரட்சி அழிந்துவிடுமோ - மக்கள் விழிப்புணர்ச்சி அழிந்து விடுமோ - என்று துடிக்கிறேன்.

"கண்ணா! எதிரிகள் ஏசுவார்களே! உன் இனத்தை இழிவு படுத்தும் கூட்டம் தூற்றிவிடுமே! உனக்காக நான் கூறவில்லை. உன் நாட்டிற்காக - உன்னை நம்பிப் பின்பற்றும் மக்களுக்காகக் கூறுகிறேன். அதற்காகவாவது இந்தப் பழக்கங்களை விட்டுவிடு. கண்ணா! கண்ணா!"

அத்தான்! அத்தான்! என்று என் மனைவி என்னை எழுப்பி னாள். உறக்கம் கலைந்து எழுந்தேன். "ஏன் இப்படி உளறுகிறீர்கள். ஏதோ கண்ணா, கண்ணா என்று சத்தமிட்டீர்களே. குசேலர் நினைவோ? கோவிலுக்குப் போகாதே என்று எனக்கு அறிவுரை சொல்லிவிட்டு நீங்கள் இரவில் அந்தரங்க பஜனை செய்கிறீர்களோ?" என்று கிண்டல் செய்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

"அந்தக் கண்ணனை நான் அழைக்கவில்லை. என் நண்பன் கண்ணனும் நானும் நேற்றுமாலை கடற்கரையில் அவன் கவிதை களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உணர்ச்சி - உள்ளத் துடிப்பு நிறைந்திருந்தது அக் கவிதைகளிலே. நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிச் சம தர்மத்தின் வழியிலே அழைத்துச் செல்வது அவன் பாடல். அவற்றை வெளியிட மறுத்தான். நான் எப்படியும் அவற்றை நாட்டிற்கு அளிக்க எண்ணினேன். அதே சிந்தனையில் உறங்கிவிட்டேன். அவனைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந் தேன். நீ எழுப்பிவிட்டாய்"

"எப்படிக் கனவு கண்டீர்கள்?"

கனவைக் கூறினேன். அவளும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.