பக்கம் எண் :

எக்கோவின் காதல்205

11
இரண்டு தந்தி

"அப்பப்பா, விடுமுறை வாங்குவதற்குள் பெரும் பாடாய்ப் போய்விட்டதே! பெரிய அதிகாரிகளாக ஆகிவிட்டால் மனிதப் பண்பே மாறிவிடுகிறது; மற்றவர்களுடைய நிலையை உணருந் தன்மை அற்றே போய்விடுகிறது; என்னுடைய அவதி என்ன என்பதை அறியாமலேயே 'ஆபீசு' வேலை 'ஆபீசு' வேலை என்று அழுதுகொண்டேயிருக்கிறார் 'மானேஜர்' என்று முணு முணுத்துக் கொண்டே அவசர அவசரமாகக் 'கார்' நிலையத்திற்கு விரைந்து கொண்டிருந்தான் அரங்கசாமி.

அரங்கசாமி காரைக்குடியில் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வாலிபன். அவன் மனைவி தேவகி முதற் பிள்ளைப் பேற்றுக்காக அவளுடைய தாயகம் சென்றிருந்தாள். முதற் பிள்ளைப் பேறானதால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந் தாள். தேவகி பிள்ளைப் பேற்றால் மிகத் தொல்லைப்படுவ தாகவும் அதனால் உடனே புறப்பட வேண்டுமென்றும் அரங்கசாமிக்குத் தந்தி வந்திருந்தது. தேவகி மீது உயிரை வைத்திருந்தான் அவன். அதனால் உடனே புறப்பட 'மானேஜரிடம்' விடுமுறை வாங்குவதற்குப் பட்டபாட்டை நினைத்துக் கொண்டு தான் கார் நிலையத்திற்கு வந்தான். இவன் வந்து சேரும் போது திருச்சிராப்பள்ளி வண்டி புறப்பட்டு விட்டது. அந்த வண்டியில் இடமும் இல்லை. அதனால் அடுத்த வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்தான்.

உட்கார்ந்திருந்த பொழுது அவன் உள்ளம் ஒரு நிலையில் இல்லை. தேவகியைப் பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. நிலையத்தில் வேறு பல ஊர்களுக்குச் செல்லத் தயாராகிக் கொண் டிருக்கும் கரி வண்டி, 'பெட்ரோல்' வண்டி இவற்றின், இரைச் சலைக் காட்டிலும் அதிகமாக இரைந்து கொண்டிருந்தது அவன் இதயம். பல வண்டிகள் உள்ளே நுழைவதையும், பல வண்டிகள் வெளிக் கிளம்புவதையும், மக்கள் ஓடோடி வந்து நெருக்கியடித்துக் கொண்டு வண்டியில் ஏறுவதையும் பார்க்கப் பார்க்க இவனுக்கு