பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

அடுக்குத் தொடர் என்பது இரட்டைக் கிளவி போலவே இரு சொற்கள் கூடி நிற்கும். ஆனால், பிரிந்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். பலபல ஊரார் பாராட்டினர் என்ற தொடரில் 'பலபல' என்பது அடுக்குத்தொடர். இது 'பல' எனப் பிரித்து நிற்பினும் தனக்குரிய பொருளைத் தரும். இதனை 'இரட்டைக் கிளவி' எனல் பொருந்தாது. இவ்வாறு ஒன்றுடன் ஒன்று கூடி நின்றும் தனித்து நின்றும் தனக்குரிய தன்மையுடன் இயங்குவது ஒற்றுமையாகும்.

பாலும் சர்க்கரையும்

பாலுடன் சர்க்கரை கலக்கப்படுகிறது. சர்க்கரை கரைந்து விடுகிறது. தன் உருவத்தையும் இழந்துவிடுகிறது; பால் மட்டும் கண்ணுக்குப் புலனாகிறது; அதற்குச் சுவையும் கூடுகிறது. இவ்வாறு ஒன்று மற்றொன்றுடன் கலந்து, தன் தனித்தன்மையை இழந்து அந்த மற்றொன்றுக்கு வலிமை கூட்டுவது ஒருமை.

மலரும் மாலையும்

பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு ஒரு மாலை தொடுக்கிறோம். பல்வேறு நிறமும் பல்வேறு மணமும் கொண்ட மலர்கள் அனைத்தும் ஒன்றுகூடி மாலையாகி அழகு தருகிறது. ஆயினும், ஒவ்வொரு வகை மலரும் அதனுடன் நிறத்துடனும் மணத்துடனும் பொலிந்து நிற்கும். தனித்தன்மையை இழந்து விடுவதும் இல்லை. மாலையிலிருந்து பிரிக்கப்படினும் அவ்வம் மலர்கள் தத்தமக்குரிய நிறத்துடனும் மணத்துடனும் மிளிரும். இவ்வாறு பல பொருள்கள் தத்தம் தனித்தன்மையை இழந்து விடாது, கூடி நின்று, பின்னர்ப் பிரியினும் பண்டைய நிலையில் இருப்பது ஒற்றுமை எனப்படும். சுருங்கக் கூறின் ஒன்றுக்குள் ஒன்று கலந்து மறைவது ஒருமை. ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ்வது ஒற்றுமை.

பாரதி விளக்கம்

ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணர்ந்த பாரதியார் நமக்குத் தெளிவு பிறக்கும் வகையில் பாடி யுள்ளார்.

"செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில்
       சிந்தனை ஒன்றுடையாள்"

என்னும் பாரதியார் பாடல் ஒற்றுமை என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவதை விடப் பிறிதொரு விளக்கம் வேண்டுவதோ? அவர்